பிசுவாமாய் பிசுவாசு

பிசுவாமாய் பிசுவாசு (Biswamoy Biswas)(2 ஜூன் 1923 - 10 ஆகஸ்ட் 1994) என்பவர் இந்திய பறவையியலாளர் ஆவார். கொல்கத்தாவில் பிறந்த இவர், புவியியல் பேராசிரியரின் மகனாவார்.[1] 1947ஆம் ஆண்டில், இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் (ZSI) இயக்குநராக இருந்த சுந்தர் லால் கோரா இவருக்கு மூன்று ஆண்டு ஆய்வு நிதியினை வழங்கினார். இதனால், இவர், பிரித்தானிய அருங்காட்சியகத்தில், எர்வின் ஸ்ட்ரெஸ்மேனின் கீழ் பெர்லின் விலங்கியல் அருங்காட்சியகம் மற்றும் எர்ணஸ்ட் மேயரின் கீழ் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் படிக்க உதவியது.

பிசுவாமாய் பிசுவாசு
பிறப்புபிசுவாமாய் பிசுவாசு
Biswamoy Biswas

(1923-06-02)2 சூன் 1923
இறப்பு10 ஆகத்து 1994(1994-08-10) (அகவை 71)

பிசுவாசு தனது தந்தை விரும்பிய புவியியலுக்குப் பதிலாக தனது கல்லூரியில் உயிரியல் பயின்றார். 1943இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், 1945இல் எம்.எஸ்சி. முடித்தார். 1952ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஜே.எல். பதுரியின் ஆய்வு வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். பணிபுரிந்தார். இதன் ஒரு பகுதியாக டெய்லி மெயில்க்கான பயணத்தில் எவரெசுட்டு சிகரத்தினைச் சுற்றி 1954ல் யெட்டி குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் 1963இல் அமெரிக்க பறவையியலாளர்கள் சங்கத்தின் தொடர்புடைய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்தில் பறவை மற்றும் பாலூட்டி பிரிவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சிக்காக 1965, 1966 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்க பறவையியலாளர்கள் சங்கத்திலிருந்து சாப்மேன் நிதியுதவி இவருக்குக் கிடைத்தது. இவர் 1981இல் ஓய்வு பெறும் வரை இவிகநிறுவன இணை இயக்குநராகவும், பின்னர் 1986 வரை சிறப்பு விஞ்ஞானியாகவும் பணியாற்றினார்.[1]

இவரது சில முக்கிய ஆய்வுகள் நேபாளம் மற்றும் பூட்டான் பறவைகள் குறித்தவையாகும்.[1] [2]

பிசுவாசு நினைவாக ஒரு பறக்கும் அணில் சிற்றினம் ஒன்றிற்கு பிசுவாமொயோப்டெரசு பிசுவாசி எனப் பெயரிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Mayr, E. (2000) "In Memoriam: Biswamoy Biswas, 1923–1994." The Auk 117(4):1030 PDF
  2. Das, P.K. (1992). "Obituary. Biswamoy Biswas". Journal of the Bombay Natural History Society 92: 398–402. https://biodiversitylibrary.org/page/48613955. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுவாமாய்_பிசுவாசு&oldid=3176008" இலிருந்து மீள்விக்கப்பட்டது