பிச்சாம்பு வினை
பிச்சாம்பு வினை (Bechamp reaction) என்பது முதன் முதலில் 1863 ஆம் ஆண்டில் அன்டோயின் பிச்சாம்பு[1] என்பவரால் கண்டறியப்பட்டது. கரிம வேதியியல் தொகுப்பு வினையில் கிளர்வுபெற்ற அரோமாட்டிக் வளையங்களில் இருந்து ஆர்செனிக் அமிலத்தை உற்பத்தி செய்ய இவ்வினை பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக அனிலீனில் இருந்து ஆர்செனிலிக் அமிலம் தயாரிப்பதைக் கூறலாம்[2][3][4] .
பிச்சாம்பு வினை ஒரு எலக்ட்ரான் கவர் அரோமாட்டிக் பதிலீட்டு வினையாகும். ஆர்செனிக் அமிலம் இங்கு மின்னணு கவரியாகப் பயன்படுத்தப்படுகிறது. ராக்சார்சோன் என்ற கரிம ஆர்சனிக் சேர்மமும் இவ்வினையில் விளைபொருளாகக் கிடைக்கிறது. இச்சேர்மம் கால்நடைகளில் இரத்தக் கழிச்சல் நோய்க்கு எதிராகச் செயல்பட்டு விலங்குகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ M. A. Bechamp (1863). "de l'action de la chaleur sur l'arseniate d'analine et de la formation d'un anilide de l'acide arsenique". Compt. Rend. 56: 1172-1175. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3013s/f1172.item.r=.
- ↑ P. Ehrlich and A. Bertheim, (1907). "Überp-Aminophenylarsinsäure". Chemische Berichte 40 (3): 3292. doi:10.1002/cber.19070400397.
- ↑ H. P. Brown and C. S. Hamilton, (1934). "Naphthalenearsonic Acids. The Application of the Béchamp Reaction to α-Naphthylamine". J. Am. Chem. Soc. 56: 151. doi:10.1021/ja01316a047.
- ↑ C. S. Hamilton and J. F. Morgan (1944). "The Preparation of Aromatic Arsonic and Arsinic Acids by the Bart, Bechamp, and Rosenmund Reactions". Organic Reactions: 2. doi:10.1002/0471264180.or002.10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471264180.
- ↑ John F. Stolz, Eranda Perera, Brian Kilonzo, Brian Kail, Bryan Crable, Edward Fisher, Mrunalini Ranganathan, Lars Wormer, and Partha Basu (2007). "Biotransformation of 3-Nitro-4-hydroxybenzene Arsonic Acid (Roxarsone) and Release of Inorganic Arsenic by Clostridium Species". Environ. Sci. Technol. 41 (3): 818–823. doi:10.1021/es061802i. பப்மெட்:17328188.