பிச்டெலைட்டு

பிச்டெலைட்டு (Fichtelite) என்பது C19H34 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். செருமனி நாட்டின் பவேரியா மாநிலத்தில் கிடைத்த அரிய புதைபடிவ மரத்தில் இந்த அரிய வெள்ளை நிற கனிமம் காணப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் இது படிகமாகிறது. இது ஒரு வளைய ஐதரோகார்பனாகும். இருமெத்தில்-ஐசோபுரோப்பைல் பெர் ஐதரோபினாந்தரீன் என்பது இதன் வேதியியல் பெயராகும். மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் மதிப்பு 1 ஆகும். இந்த அளவு மென்மையும் வழவழப்புமான தாதுப்பொருளுக்கு உரியதாகும். தண்ணிரை விட சற்று அடர்த்தியான இக்கனிமத்தின் ஒப்படர்த்தி 1.032 ஆகும்.

பிச்டெலைட்டு
Fichtelite
வேதிக் கட்டமைப்பு
பொதுவானாவை
வகைகரிமக் கனிமம்
வேதி வாய்பாடுC19H34
இனங்காணல்
நிறம்நிறமற்றது, வெண்மை, வெளிர் மஞ்சள்
படிக இயல்புநீளமான படிகங்கள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு {001} மற்றும் {100}
மோவின் அளவுகோல் வலிமை1
மிளிர்வுஉயவுத்தன்மை
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி0.631 கணக்கிடப்பட்டது[1] 1.032[2]
ஒளியியல் பண்புகள்ஈரச்சு
உருகுநிலை44.2 °செல்சியசு – 45.0 °செல்சியசு
மேற்கோள்கள்[1][2][3]

முதன்முதலில் 1841 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. செருமனி நாட்டின் பவேரியாவில் உள்ள் பிச்டெல்கேபிர்ச்சு என்ற இடத்தில் கிடைத்த காரணத்தால் பிச்டெலைட்டு எனப் பெயரிடப்பட்டது.[3] சதுப்பு நிலத்திலிருந்து படிமமாக்கப்பட்ட பைன் மரத்திலிருந்தும் கரிமம் நிறைந்த நவீன கடல் வண்டல்களிலிருந்தும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிச்டெலைட்டு கனிமத்தை Fic[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 http://rruff.geo.arizona.edu/doclib/hom/fichtelite.pdf Handbook of Mineralogy
  2. 2.0 2.1 http://webmineral.com/data/Fichtelite.shtml Webmineral data
  3. 3.0 3.1 http://www.mindat.org/min-1545.html Mindat.org
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்டெலைட்டு&oldid=4130736" இலிருந்து மீள்விக்கப்பட்டது