பிடவம்
பிடவம் (Randia malabarica) என்னும் மலர் பிடவு என்னும் சொல்லாலும் குறிக்கப்படும்.
- பிடவம் மலர் படம். பி.எல்.சாமி போன்ற அறிஞர் கருத்து
பிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று.
பிடவ மலரைப்பற்றிச் சங்கப்பாடல்களில் உள்ள குறிப்புகள் இதன் தன்மையை உண்ணர்த்துகின்றன. கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.
- இடம்
- முல்லை நிலத்தில் பூக்கும். [1]
- மலைக்காட்டில் பூக்கும். [2]
- மணல் வெளியிலும் பூக்கும். [3]
- வழியெங்கும் பூத்துக் குலுங்கும். [4]
- பருவம்
- கார் பருவத்தில் மலரும் [5] [6]
- வானத்தில் மேக மூட்டத்தில் நனைந்து பூக்கும். [7]
- மாலையில் மலரும் [8]
- கூர்நுனி கொண்ட களாக்காய் காய்க்கும்போது பிடவு மலரும் [9]
- தோற்றம்
- இலை இல்லாமல் பூத்துக் குலுங்கும். [10]
- செடியில் நீண்ட முட்கள் இருக்கும். [11]
- செடி முடம்பட்ட கால், கை போல இருக்கும். [12]
- செடி கருமையாகவும் இருக்கும். பூ வெண்மையாக இருக்கும். [13]
- காம்பு நீளமாக இருக்கும். [14]
- மொட்டுகள் கூர்மையாக இருக்கும். [15]
- வெள்ளை வெளேர் எனப் பூத்துக் குலுங்கும். [16]
- குளுமையும் நறுமணமும் கொண்டது. [17]
- குலை குலையாகப் பூக்கும். [18]
- பூவின் முதுகில் சிவந்த கோடுகள் இருக்கும். [19]
- பறவை
- பறவைகள் பிடவப் பூக்குலைக்குள் பதுங்கும். பறவை கடத்திடைப் பிடவின் தொடைக்குலை சேக்கும். [20]
- ஊர்
- பிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. [21]
- பூக்கூடை
- பிடகை என்னும் சொல் பூக்கூடையை உணர்த்தும். [22]
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ புறவில் சேண் நாறு பிடவம் முல்லைப்பாட்டு 25
- ↑ ஓங்குமலைச் சிலம்பின் பிடவுடன் மலர்ந்த வேங்கை அகநானூறு 147
- ↑ வார்மணல் ஒருசிறைப் பிடவு அவிழ் கொழுநிழல் (இரலை துணையொடு வதியும்) அகநானூறு 139-11
- ↑ ஐங்குறுநூறு 345
- ↑ ஐங்குறுநூறு 499,
- ↑ நற்றிணை 99
- ↑ வான்பிசிர்க் கருவியில் பிடவு முகை தகைய ஐங்குறுநூறு 461
- ↑ நற்றிணை 238
- ↑ நற்றிணை 256
- ↑ இலையில பிடவம் ஈர்மலர் அரும்ப நற்றிணை 242
- ↑ முட்புறப் பிடவம் கலித்தொகை 101-2
- ↑ தொகுமுகை விழிந்த முடக்கால் பிடவு அகநானூறு 344-3
- ↑ சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல் அகநானூறு 34-1
- ↑ குறும்புதல் பிடவின் நெடுங்கால் அலரி அகநானூறு 154-4
- ↑ குளிர்கொள் கூர்முகை அலரி அகநானூறு 183-11
- ↑ வெண்பிடவு அவிழ்ந்த வீசு கமழ் புறவு அகநானூறு 184-7
- ↑ தண் நறும் பிடவம் கலித்தொகை 102-2
- ↑ நெருங்கு குலைப் பிடவம் அகநானூறு 23
- ↑ அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன செவ் வரி இதழ சேண் நாறு பிடவு நற்றிணை 25
- ↑ பதிற்றுப்பத்து 66-17
- ↑ புறநானூறு 395
- ↑ மதுரைக்காஞ்சி 397