பிட்டை
பிட்டை கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்துகொண்டு ஆண்ட சேர வேந்தன்.[1] சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் இவனைப் போரில் வீழ்த்தினான்.
புகழூர் ஆறுநாட்டான் மலை சமணர் படுக்கை ஒன்றில் வீற்றிருந்த சமணத்துறவிகளில் ஒருவர் பெயர் பிட்டன். சங்ககாலப் புகழூர்க் கல்வெட்டில் ‘பிட்டன்’ எனப் படிக்கப்படும் எழுத்து ‘பிட்டை’ எனவும் படிக்கும் நிலையில் உள்ளது. இவன் துறவியான இந்தத் துறவு சோழன் கிள்ளிவளவனிட் தோற்ற பின்னர் நிகழ்ந்தது ஆகலாம்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ புறநானூறு 373