பிட் ரிவர்ஸ் மியூசியம்
பிட் ரிவர்ஸ் மியூசியம் (Pitt Rivers Museum) என்பது ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பழமையான அருங்காட்சியகம் ஆகும். இங்கு தொல் பொருள்கள், மாந்தவியல் வரலாற்றுப் பொருள்கள் முதலியவற்றைக் காட்சிப் படுத்தியுள்ளார்கள். ஆக்சுபோர்டு பல்கலைக் கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கிழக்கில் பிட் ரிவர்ஸ் மியூசியம் அமைந்துள்ளது. [1]
லெப்டினென்ட் ஜெனரல் ஆகஸ்டஸ் பிட் ரிவர்ஸ் என்பவரால் இந்த அருங்காட்சியகம் 1884 இல் தோற்றுவிக்கப் பட்டது. மாந்தவியல் கற்பிக்கும் ஓர் ஆசிரியர் தனியாக அமர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர் திரட்டிய பழமையான அரிய பொருள்களை ஆகஸ்டீஸ் பிட் ரிவர்ஸ் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்துக்கு வழங்கினார். இந்த அருங்காட்சியகத்தின் காப்பாளராக என்றி பல்போர் என்பவர் இருந்தார். இரண்டாவது நிபந்தனை திரட்டிய பொருள்களை வைப்பதற்கு தனியாக ஒரு கட்டடம் உருவாக்க வேண்டும் என்பது. அவ்வாறே 1885 இல் கட்டடப் பணிகள் தொடங்கி 1886 இல் அருங்காட்சிக்கான புதிய கட்டடம் உருவானது.
தொடக்கக் காலத்தில் 22000 அரிய பொருள்கள் இருந்தன. அறிஞர்கள், கல்வியாளர்கள், பயணிகள் முதலானோர் தொடர்ந்து திரட்டியவற்றைக் கொடையாக வழங்கியதால் இப்பொழுது 500000 பொருள்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்
தொகு- ↑ "Pitt Rivers Museum". Culture 24, UK. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.