பிணைவடக் கம்பம்

பிணைவடக் கம்பம் (guyed mast) என்பது தனது உறுதிக்காக பிணை வடங்களில் தங்கியுள்ள மெல்லியதும் உயரமானதுமான ஒரு அமைப்பு ஆகும். பொதுவாகக் கம்பங்கள் தமது எடையைத் தாங்குவதற்குப் போதுமான அமுக்க வலுவைக் கொண்டவை. ஆனால் பக்கவாட்டு விசைகளைத் தாங்கி நிலையாக நிற்கும் வலுவற்றவை.[1] [2]இதனால், இவற்றை நிலையாக நிறுத்துவதற்கு பிணை வடங்கள் அல்லது ஆள் வடங்கள் எனப்படும் இழுவை நிலையில் உள்ள வடங்கள் தேவைப்படுகின்றன. இவ்வடங்களின் ஒரு முனை கம்பத்தின் குறித்த உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலும், அடுத்த முனை நிலத்திலும் பிணைக்கப்பட்டிருக்கும். கம்பத்தைச் சுற்றி சம கோண அளவுகளில் இது போன்ற பன பிணை வடங்கள் இருக்கும். இவ்வமைப்பு காற்று விசை போன்ற பக்கவாட்டு விசைகளுக்கு எதிராகக் கம்பத்தை நிலைக்குத்தாக வைத்திருக்கிறது.

ஒரு பிணைவட வானொலிக் கம்பம். பிணை வடங்கள் மங்கலாகத் தெரிகின்றன.

பயன்பாடுகள் தொகு

வானொலி அலைவாங்கிகளுக்குப் பிணைவடக் கம்பங்கள் பெரும்பாலும் பயன்படுகின்றன. கம்பங்கள் அலைவாங்கிகளை அதன் உச்சியில் தாங்கலாம், அல்லது முழுக் கம்பமுமே ஒரு அலை வாங்கியாகச் செயற்படலாம். வானொலி அலைவாங்கிகள் மிகவும் உயரமானவை என்பதால் அவற்றை உறுதியாக வைத்திருப்பதற்குப் பல தொகுதிப் பிணை வடங்கள் தேவை. இரண்டு முதல் நான்கு தொகுதிப் பிணை வடங்கள் கம்பத்தின் வெவ்வேறு உயரங்களை நிலத்துடன் பிணைக்கின்றன. இது கம்பம் நெளியாமல் இருப்பதற்கு அவசியமானது.

பாய்களையும் பிற கூறுகளையும் தாங்குவதற்காகப் பாய்க்கப்பல்களில் அமைக்கப்படும் பாய்மரங்களும் பெரும்பாலும் பிணைமரக் கம்ப வகையைச் சேர்ந்தனவே.

நிலத்திலிருந்து குறித்த உயரங்களில் காலநிலை அளவீடுகளைச் செய்வதற்கும் பிணைவடக் கம்பங்கள் பயன்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Guyed Towers & Masts". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.
  2. Radio Masts & Tower Equipment
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணைவடக்_கம்பம்&oldid=3563362" இலிருந்து மீள்விக்கப்பட்டது