பிண்டாரா, குசராத்

குசராத்திலுள்ள ஒரு கிராமம்

பிண்டாரா (Pindara) எனவும் பிண்டாரகா அல்லது பிண்டதாரகா என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் குசராத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள கச்சு வளைகுடாவின் கரையோரத்தில் உள்ள துவாரகைக்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும்.

இதிகாசத்தில்

தொகு

"ஒருவன் அடக்கப்பட்ட புலன்கள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவுகளுடன் துவாராவதிக்கு செல்ல வேண்டும். அங்கு பிண்டாரகா என்று அழைக்கப்படும் புனித தலத்தில் நீராட வேண்டும். அதன் மூலம் தங்கத்தின் பலனை மிகுதியாகப் பெறலாம்" என மகாபாரதத்தில் (3.82) குறிப்பிடப்பட்டுள்ளது. அனுசாசனபர்வதம் (25.57) பிண்டாரகாவை ஒரு புனிதத் தலமாகக் குறிப்பிடுகிறது. [1]

மகாபாரதத்தின் உஜ்யந்த பர்வத்தில் "உஜ்ஜயந்தபர்வதம் என்ற மலை சௌராட்டிரா பிரதேசத்தில் பிண்டாரகா கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதத்தின் வனபர்வம் அத்தியாயம் 21ன் படி இந்த மலைக்கு மாய சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. துவாரகையின் யாதவ மோதலின் முடிவில் கோயில் கடலில் மூழ்கியது.

தொல்லியல்

தொகு
 
7 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிண்டாரா கோயில்கள்

பழைய கற்காலத்தின் எச்சங்களால் இந்த இடம் நிறைந்துள்ளது. ஒரு அகழ்வாராய்ச்சியில் சிவப்பு பளபளப்பான பொருட்கள் மற்றும் அம்ப்போரா துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது மத்தியதரைக் கடலுடன் கடல் இணைப்புடன் ஒரு ஆரம்ப குடியேற்றத்தை பரிந்துரைத்தது. 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இத்தலம் புனித யாத்திரை தலமாக இருந்தது. [1]

கிராமத்திற்கு அருகில் 7 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐந்து கோயில்களும்,ஒரு மண்டபமும் உள்ளது. அவை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாகும். [2] [1]

கோவாவின் தேசிய கடலியல் நிறுவனம் பிண்டாரா கடற்கரையில் நீரில் மூழ்கிய கோவில் வளாகத்தை கண்டுபிடித்தது. வடமேற்கு சௌராட்டிராவில் கடலோர ஆய்வுகளில் தற்போது அலை மண்டலத்தில் உள்ள ஒரு கோவில் வளாகத்தின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. [1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Gaur, A. S.; Tripathi, Sila (2007). Sundaresh, National Institute of Oceanography, Goa. "A submerged temple complex off Pindara, on the northwestern coast of Saurashtra". Man and Environment (Indian Society for Prehistoric and Quaternary Studies) XXXII (2): 37–40. https://www.researchgate.net/publication/27667438. 
  2. Nanavati, J. M.; Dhaky, M. A. (1969). "The Maitraka and the Saindhava Temples of Gujarat". Artibus Asiae. Supplementum (JSTOR) 26: 58, 77–78. doi:10.2307/1522666. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிண்டாரா,_குசராத்&oldid=3799782" இலிருந்து மீள்விக்கப்பட்டது