பிந்து சுப்ரமணியம்

இசைக் கலைஞர்

பிந்து சுப்பிரமணியம் (Bindu Subramaniam) ஓர் இந்தியப் பாடகரும், பாடலாசிரியரும், தொழிலதிபரும், எழுத்தாளரும் இசைக் கல்வியாளருமாவார். ஹிந்துஸ்தான் டைம்ஸ், பிந்துவை "மூன்றாம் தலைமுறை அதிசயம்" என்றும், பெமினா கர்நாடக பத்திரிகை "குழந்தைகள் படிக்கும் முறையை மாற்றும் பெங்களூரு பெண்" என்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா " உறுதியான இளம் சோப்ரானோ "என்றும்,[1] ஒரு "உறுதியளிக்கப்பட்ட இளம் பாடகியாக"வும் விவருத்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில், வெர்வ் இதழில் 12 அடுத்த தலைமுறை சாதனையாளர்களின் பட்டியலில் தோன்றினார்[2]

பிந்து சுப்ரமணியம்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சீதா சுப்ரமணியம்
இறப்புமேற்கத்திய இசை, கருநாடக இசை, பாப்
தொழில்(கள்)பாடகர்/பாடலாசிரியர் தொழிலதிபர், எழுத்தாளர், இசைக் கல்வியாளர்
இசைக்கருவி(கள்)பியானோ
இசைத்துறையில்1997–தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்எல். சுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி, சும்ப்ரமணியா, தயிர் சாதம் திட்டம்

இவர் உலகம் முழுவதும் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். மேலும் இவரது முதல் தனி இசைத் தொகுப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. மேலும் 'கிமா விருது'க்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.[3]

இவர், நடிப்புக் கலைக்கான சுப்ரமணியம் அகாதமியின் தலைவராக இருக்கிறார் (SaPa). இது இசை ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தொழில்முறை கலைஞர்களாக மாற பயிற்சி அளிக்கிறது. 2014 ஆம் ஆண்டில், அவர் 'பள்ளிகளில் சபா' என்றத் திட்டத்தை தொடங்கினார். இது முக்கிய கல்வி பாடத்திட்டத்தில் இசையை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியாகும். பள்ளிகளில் 'சபா' இந்தியா முழுவதும் 25,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வேலை செய்கிறது (2018 நிலவரப்படி).

இவர் வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் மகளாவார். அவருடன் இணைந்து குளோபல் பியூஷன், விஷன்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் ஏதென்ஸ் உள்ளிட்ட பல வெளியீடுகளில் பணியாற்றியுள்ளார். இவரது சகோதரர் அம்பி சுப்பிரமணியத்துடன் சேர்ந்து, 2013ஆம் ஆண்டில் 'சுப்ரமணியா' என்ற சமகால உலக இசை இசைக்குழுவைத் தொடங்கினார்.[4] 2018ஆம் ஆண்டில், இவர் தனது சகோதரர் அம்பி, கர்நாடக இணைவு கலைஞர் மகேஷ் ராகவன், மிருதங்கக் கலைஞர் அக்‌ஷய் அனந்தபத்மநாபன் ஆகியோருடன் இணைந்து 'தயிர் சாதம்' என்ற திட்டத்தை உருவாக்கினார்.

தொழில்

தொகு

பிந்து தனது முதல் பாடலை 7 வயதில் எழுதினார். மேலும் தனது 12 வயதில் நோர்வேயில் முதல் மேடையில் நிகழ்த்தினார்.[5] இவர் தனது அசல் பாடல்களுக்காக 16 மற்றும் 17 வது பில்போர்டு உலக பாடல் போட்டியில் கௌரவ குறிப்புகளை வென்றார். மேலும், யுனிசாங் உலக பாடல் போட்டியின் செயல்திறன் பிரிவில் அரையிறுதிப் போட்டியாளராக இருந்தார்.

இசைக் கல்வி

தொகு

இவர், 2007 இல் எல். சுப்பிரமணியமும், கவிதா கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து நிறுவிய இந்திய மற்றும் உலகளாவிய இசை நிறுவனமான 'நடிப்புக் கலைக்கான சுப்ரமணியம் அகாடமி'யின் தலைவராக இருக்கிறார் (Sapa). பிந்து 2011 இல் அதன் தலைவராகப் பொறுப்பேற்றார், மேலும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இசையினைக் கற்க பயிற்சி அளிக்கும் ஒரு பாடத்திட்டத்தையும் உருவாக்கினார். முக்கிய கல்விப் பாடத்திட்டத்தில் இசையை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியாக, 2014 இல் அகதாமியின் 'பள்ளியில் சபா" என்ற திட்டத்தை நிறுவினார். இந்த திட்டம் 2020 வரை 30,000 குழந்தைகளுடன் வேலை செய்கிறது.

பள்ளிகளில் சபாவுக்கான பிந்துவின் குறிக்கோள் இந்தியாவில் இசை கல்விக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதாகும்.[6] இத்திட்டம் இன்போசிஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்பட்டது. தற்போது அட்சய பாத்திரன் அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

சொந்த வாழ்க்கை

தொகு

பிந்து கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸில் சீதா சுப்ரமணியமாக வயலின் கலைஞர் எல். சுப்பிரமணியம் மற்றும் பாடகி விஜயஸ்ரீ (விஜி) சுப்ரமணியத்திற்கு பிறந்தார். இவளுக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்: வயலின் கலைஞர் அம்பி சுப்பிரமணியம் மற்றும் டாக்டர் நாராயண சுப்பிரமணியம் - தலை மற்றும் கழுத்து புற்றுநோய் நிபுணர், எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞர். இவர் தனது தாயின் மரணத்திற்குப் பிறகு, 1996 இல் தனது குடும்பத்துடன் இந்தியாவின் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். இவரது தந்தை பாலிவுட் பின்னணி பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தியை 1999இல் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

இவர் சட்டப்பூர்வமாக 2009 இல் சீதா என்ற பெயரை பிந்து என்று மாற்றிக் கொண்டார்.

பிந்து முன்னணி வயலின் கலைஞர் சஞ்சீவ் நாயக் என்பவரை மணந்தார்.[7] இவர்களுக்கு 2011 இல் பிறந்த மகதி சுப்ரமணியம் என்ற மகள் உள்ளார். இவரது மகள் தனது முதல் தனிப்பாடலை 2018 இல் பதிவு செய்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Femina Karnataka".
  2. "Verve Online".
  3. "Web Archive - Thamarai". Archived from the original on 2013-09-22.
  4. "Asian Age".
  5. "World Music Central".
  6. "The National - SaPa's pitch-perfect programme makes music in Indian schools fun". https://www.thenational.ae/arts-culture/music/sapa-s-pitch-perfect-programme-makes-music-in-indian-schools-fun-1.758387. 
  7. "The Times of India - Newly wed: Bindu Subramaniam & Sanjeev Nayak". https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/music/Newly-wed-Bindu-Subramaniam-Sanjeev-Nayak/articleshow/49790256.cms. 
  8. "The New Indian Express - L Subramaniam’s granddaughter records first solo song". http://www.newindianexpress.com/cities/bengaluru/2018/jul/21/l-subramaniams-granddaughter-records-first-solo-song-1846252.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்து_சுப்ரமணியம்&oldid=3280496" இலிருந்து மீள்விக்கப்பட்டது