பிந்தேசுவரி பிரசாத் மண்டல்

பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (Bindheshwari Prasad Mandal பி. 1918–1982), மண்டல் ஆணைக்குழு என்று அறியப்படும் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். பி.பி. மண்டல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். இவர் பிற்படுத்தப்பட்டோர் இரண்டாவது குழுவின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகளை இந்தக் குழு இந்திய நடுவணரசுக்குச் சமர்ப்பித்தது. பி.பி.மண்டல் வடக்குப் பிகாரில் சகர்சா என்னும் பகுதியில் வசதிமிக்க ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1][2][3][4]

பிந்தேசுவரி பிரசாத் மண்டல்
Babu Bp Mandal.jpg
7வது பீகார் முதலமைச்சர்
பதவியில்
1 பிப்ரவரி 1968 – 2 மார்ச் 1968
முன்னவர் சதீசு பிரசாத் சிங்
பின்வந்தவர் போலா பசுவான் சாசுதிரி
மதேபுரா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1972
பின்வந்தவர் இராஜேந்திர பிரசாத் யாதவ்
பதவியில்
1977–1980
முன்னவர் இராஜேந்திர பிரசாத் யாதவ்
பின்வந்தவர் இராஜேந்திர பிரசாத் யாதவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 8 (1918)
இறப்பு ஏப்ரல் 13, 1982(1982-04-13) (அகவை 63)
வாழ்க்கை துணைவர்(கள்) சீதா மண்டல்
பிள்ளைகள் 7

குடும்பம்தொகு

பி. பி. மண்டல் பீகாரில் இந்து யாதவ சமூகத்தில் பிறந்தவர் ஆவார்.[5] இவர் பணக்கார ஜமீன்தார் ராஷ் பிஹாரி லால் மண்டலின் மகன் ஆவார். உள்ளூர் புராணத்தின் படி, இவரது தந்தை 1911ஆம் ஆண்டு தில்லி தர்பாரில் இந்திய சுதந்திரத்திற்கான கோரிக்கையை எழுப்பினார். மண்டலின் தந்தை பீகாரின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்.

மண்டல்குழு அறிக்கைதொகு

1968ஆம் ஆண்டில் பிகார் மாநில முதலமைச்சராக 30 நாள்கள் மட்டும் ஆட்சிப் புரிந்தார். [6] 1978 திசம்பரில் மொரார்சி தேசாய் பிரதமராக இருந்தபோது பி.பி.மண்டல் தலைமையில் மனித உரிமைகள் குழு அமைக்கப்பட்டது. அரசு அலுவலங்களிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் பற்றிய பரிந்துரைகள் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. ஆனால் சுமார் 10 ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தன,

மேற்கோள்தொகு