பினா சகீன் சித்திக்
பீனா சகீன் சித்திக் (Bina Shaheen Siddiqui) என்பவர் பாக்கித்தானிய வேதியியலாளர் மற்றும் கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள எச். ஈ. ஜி. வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.[1] சித்திக் கராச்சி பல்கலைக்கழகத்தில் 1978-ல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.[2] 1980-ல், இதே பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]
பாக்கித்தானின் உள்நாட்டுத் தாவரங்களின் இரசாயன கூறுகளில் நிபுணத்துவம் பெற்றவர்.[3] இவர் 1989-ல் உலக அறிவியல் அகாதமிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] மேலும் 1997-ல் பாக்கித்தான் அறிவியல் அகாதமியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]பாக்கித்தானின் வேதியியல் சமூகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[5]
விருதுகள்
தொகு- வேதியியலில் முனைவர் அப்துஸ் சலாம் பரிசு (1986)
- நிஷான்-இ-அஸ்மத்-இ-இல்ம் பிளேக், கராச்சி பல்கலைக்கழகம் (1989)
- நிஷான்-இ-அஸ்மத்-இ-டானிஷ் பிளேக், கராச்சி பல்கலைக்கழகம் (1993)
- நிஷானே- டேனிஷ் பிளேக், கராச்சி பல்கலைக்கழகம் (1998)
- தேசிய புத்தக அறக்கட்டளையின் முதல் பரிசு (1997)
- ஸ்டார் கேர்ள்ஸ் அண்ட் வுமன்ஸ் அறக்கட்டளையின் நட்சத்திர மகளிர் ஆண்டு விருது மற்றும் தங்கப் பதக்கம் (1997)
- தம்கா-இ-இம்தியாசு, பாக்கித்தான் அரசு (2000)
- ஈரான் இசுலாமிய குடியரசின் ஜனாதிபதியின் குவாரிசுமி விருது (2001)
- அரசாங்கத்தால் சிதாரா-இ-இம்தியாசு பாக்கித்தானின் (2004)
- புகழ்பெற்ற தேசிய பேராசிரியர்[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "ISESCO Women in Science Chair at QAU". isesco.qau.edu.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
- ↑ "Bina Shaheen Siddiqui | Longdom Publishing SL". www.longdom.org. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
- ↑ "Distinguished National Professor Bina Siddiqui". World Science Forum. Archived from the original on 2021-10-12. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
- ↑ "Siddiqui, Bina Shaheen | TWAS". 2021-10-12. Archived from the original on 2021-10-12. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
- ↑ "Chemical Society of Pakistan Fellows" (PDF). Archived from the original (PDF) on 20 December 2021.