பினா ராய் (இந்தி: बीना राय; 13 ஜூலை 1932 - 6 டிசம்பர் 2009), இந்தி சினிமாவின் கருப்பு மற்றும் வெள்ளை சகாப்தம் களில் முன்னணி நடிகையாய் இருந்தவர். இவர் நடித்த அனார்கலி (1953) தாஜ் மஹால் (1963) போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் . கங்கட் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது (1960) பெற்றவர்.

பிறப்பும் வளர்ப்பும்

தொகு

பீனா ராயின் இயற் பெயர் கிருஷ்ணா சாரின் என்பதாகும் . இவர் பிறந்த இடம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் . இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது லாகூரிரிலிருந்து ,உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோ வில் குடி பெயர்ந்தனர் இவருடைய பெற்றோர்கள் .

கல்வி

தொகு

அவர் லாகூரில் பள்ளி படிப்பையும் , பின்னர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் ஐ.டி. கல்லூரியில் படித்தார் . ஆனால் பெற்றோர்கள் கான்பூரில் வசித்து வந்தனர் பினா ராய் நடிப்பதற்கு செல்லும் வரை கான் பூரில் தான் வசித்தார் . பினா ராய் 1950 ஆம் ஆண்டில் லக்னோ இசபெல்லா தொபர்ன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது பம்பாயில் நடைபெற்ற அழகிப்போட்டியில் கலந்து கொண்டு ,முதல் பரிசான 25 ,000 ரூபாயை பரிசாகப் பெற்றார்

சினிமா மோகம்

தொகு

அழகிப்போட்டியில் வெற்றி பெற்றதால் காலி கடா 1951என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது . அவர் படங்களில் நடிக்க அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை .எனவே பெற்றோரிடம் சம்மதம் பெரும் வரையில் அவர் உண்ணா விரதம் மேற்கொண்டார்

திருமண வாழ்கை, மற்றும் சினிமா தயாரிப்பும்

தொகு

பீனாராய் பிறந்த தேதி ஜூலை 13 ,1932 ஆகும் .அவருடைய முதல் படம் காலி கடா விற்கு கையெழுத்து போட்டது ஜூலை 13 ,1950 . இந்த திரைப்படம் ஜூலை 13 ,1952 இல் ரிலீஸ் ஆனது - அதே தேதியில் நடிகர் பிரேம்நாத் உடன் இவருக்கு திருமண நிச்சய தார்த்தமும் நடைபெற்றது. நடிகர் பிரேம்நாத் ,தன்னுடைய தங்கை கிருஷ்ணாவை பிரபல நடிகர் ராஜ் கபூருக்கு கொடுத்திருந்தார் . எனவே பீனா ராய் இவ்வகையில் கபூர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஆனார் . பீனா ராயும் பிரேம்நாத்தும் 1952 இல் aurat என்ற திரைப்படத்தில் நடித்தனர் .அப்போது தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது .இப்படம் வெற்றிபெற வில்லை . இவர்கள் 1952 செப்டம்பர் 2 இல் திருமணம் செய்து கொண்டபின் பி .என் பிலிம்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர் .இதில் எடுத்த படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தாலும் அவைகள் தோல்வி அடைந்தன .நிஜ வாழ்க்கையில் இணைந்த இவர்கள் நடிப்பை இந்தி ரசிகர்கள் புறக்கணித்தனர் .அவ்வாறு தோல்வியுற்ற திரைப்படங்கள் ஷகுபா , பிரிசனர் ஆப் கோல்கொண்டா ,சமுண்டெர் மற்றும் வாதான் .அனைத்து படங்களும் தோல்வி . எனவே 1968 வரை அவ்வப்போது திரைப்படங்களில் நடித்தார் .பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார் .

பின்னர் பிரேம்நாத் சின்னத்திரைக்கு சீரியல் எடுத்து கொடுத்து வந்தார் .இவரது மகன் பிரேம் கிஷன் நடித்த துல்ஹான் ஒஹி ஜோ பியா மண் பாயே (1977) என்ற படம் வெற்றி பெற்றது .தன் மகள் அகான்சா மல்கோத்ராயாவையும் நடிகை ஆக்கினார் .

மரணம்

தொகு

பீனாராய் 2009 டிசம்பர் 6 இல் மரணம் அடைந்தார். பீனா ராய்க்கு பிரேம் கிஷன் ,கைலாஷ் என்ற மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் .சித்தார்த் ,அகான்சா என்ற பேரக்குழந்தைகளும் உள்ளனர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினா_ராய்&oldid=3946585" இலிருந்து மீள்விக்கப்பட்டது