பின்நவீனத்துவத் திறனாய்வு

பின்நவீனத்துவத் திறனாய்வு (post-pmodernist criticism) என்பது பின்நவீனத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு அணுகுமுறை ஆகும். நவீனத்துவம் நெருக்கடிக்கு உள்ளான காலகட்டத்தில், அதற்கு மாற்றாகவே பின்நவீனத்துவம் உருவானது. நவீனத்துவத்தின் நீட்சியே பின்நவீனத்துவம் என்பாரும் உளர். முதலாளித்துவம் குழும முதலாளித்துவமாக மாறி நுகர்வுக் கலாச்சாரம் வளர்கின்ற ஒரு சூழ்நிலையையே பின்நவீனத்துவம் வெளிப்படுத்தியது.[1]

இலக்கியப் படைப்பு ஒரு மையத்தைப் பற்றி ஒன்றிணைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபை பின்நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. மையம் அற்ற அமைப்பு முறையை முன்வைக்கும் பின்நவீனத்துவம், ஒரு படைப்புக்கு உள்ளேயே உட்கூறுகள் தொடர்பற்று இயங்கலாம் என்கிறது. இவ்வாறு பிளவுபட்ட கூறுகளை ஏற்றுக்கொள்வதை முக்கிய பண்புகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் பின்நவீனத்துவம், நவீனத்துவம் முன்வைத்த "தூய்மை" என்னும் கருத்தையும் ஏற்றுக்கொள்வது இல்லை.

குறிப்புக்கள்

தொகு
  1. நடராசன், தி. சு., 2009. பக். 160.

உசாத்துணைகள்

தொகு
  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

தொகு