பின்லாந்தின் தற்சிந்தனையர் ஒன்றியம்

பின்லாந்தின் தற்சிந்தனையர் ஒன்றியம் (Union of Freethinkers of Finland, பின்னிய மொழி: Vapaa-ajattelijain liitto, சுவீடிய: Fritänkarnas Förbund)[1] என்பது பின்லாந்திலுள்ள மிகப்பெரிய மதச்சார்பற்ற, கட்டற்ற சிந்தனை அமைப்பாகும். இவ்வமைப்பு, மதச்சார்பற்ற பின்னியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவதோடு, அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவுள்ள மற்றும் ஆய்வுரீதியான உலகப்பார்வையை மக்களிடையே ஊக்குவிப்பதோடு, மனித விழுமியங்களைப் பேணுவதிலும் அக்கறை செலுத்துகிறது.[2]

பின்லாந்தின் தற்சிந்தனையர் ஒன்றியத்தின் சின்னம்

இவ்வமைப்பு 1937ல் குடிசார் பதிவுக் கழகங்களின் ஒன்றியம் (the Union of Civil Register Associations) எனும் பெயரில் நிறுவப்பட்டது.[3]

இவ்வமைப்பின் டம்பரே பிரிவு Eroakirkosta.fi எனும் இணையத்தளத்தை 2003ல் உருவாக்கியது. இதன்மூலம், பின்லாந்தின் அரசுத் தேவாலயங்களிலிருந்து நீங்குவதற்கான மின்னணுச் சேவையைப் பெறமுடியும்.[4]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு