பின் அமைப்பியத் திறனாய்வு
பின் அமைப்பியத் திறனாய்வு (Post-Structuralist criticism) என்பது, பின் அமைப்பியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு திறனாய்வைக் குறிக்கிறது. அறுபதுகளின் இறுதிப் பகுதியில் பிரான்சு நாட்டில் பின் அமைப்பியம் தோன்றியது. அமைப்பியத்தின் ஒரு வளர்ச்சி நிலையாக இது இருந்தாலும். பின் அமைப்பியம், அமைப்பியத்தோடு மாறுபடுகின்ற ஒரு கொள்கையாகவே உள்ளது.
அமைப்பியத்தின் கீழ் படைப்புக்கும், படைப்பாளிக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பின் அமைப்பியத்தில் உரைக்கும் (text), வாசகனுக்கும் கொடுக்கப்பட்டது. இலக்கியம், வரையறுக்கப்பட்ட பொருள் கொண்ட, தன்னுள் முழுமையான ஒரு அமைப்பு என்ற முன்னைய கருத்தில் இருந்து இலக்கியம் வரையறையற்ற, பன்முகத் தன்மையோடு கூடிய பொருள் கொண்டது என்னும் மாற்றுக் கருத்து உருவானது. மொழியின் கூறுகளுக்கும் பொருளுக்கும் இடையே கட்டுப்பாட்டுக்குள் அடங்காதனவும், மேலெழுந்தவாரியுமான உறவுகளே காணப்படுகின்றன என்ற உண்மை பின் அமைப்பியத்துக்கு அடிப்படையை வழங்கியது எனலாம்.[1]
பின் அமைப்பியல்வாதிகள்:பிரெஞ்சு அறிஞர்கள்
தொகு- ரோலன் பார்த்
- தெரிதா
- லக்கான்
- ஃபூக்கோ
குறிப்புக்கள்
தொகு- ↑ நடராசன், தி. சு., 2009. பக். 148, 149.
உசாத்துணைகள்
தொகு- பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
- நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).