பின் தொடரும் நிழலின் குரல் (நூல்)
பின் தொடரும் நிழலின் குரல் ஜெயமோகன் எழுதிய மூன்றாவது புதினம். தமிழினி பதிப்பக வெளியீடாக 1999 ஆம் ஆண்டு இது வெளிவந்தது. ஏறத்தாழ எழுநூறு பக்கங்கள் கொண்டது இந்த நாவல். இது ஓர் அரசியல் நாவல்; சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்து அந்த நாடு சிதறியதன் பின்னணியில் அரசியலுக்கும் அறத்துக்கும் இடையேயான உறவை விவாதிக்கிறது.
கரு
அருணாச்சலம் தொழிற்சங்க ஊழியன். சங்கத்தில் இருந்து பழைய ஸ்டாலினிஸ்டுகளை கட்சி களைகிறது. அதற்கு அருணாச்சலத்தை கருவியாக்குகிறது. அவன் தன் குருவான கெ.கெ.எம் என்பவரை வெளியேற்றுகிறான். அந்தக்குற்ற உணர்ச்சியால் அவன் ஒரு நூல் எழுத ஆரம்பிக்கிறான். அது கட்சியில் இருந்து கெ.கெ.எம் காலகட்டத்தில் வெளியேற்றப்பட்டு மறைந்துபோன வீரபத்ரபிள்ளை என்ற பழைய தோழரைப்பற்றிய நூல்
அப்போதுதான் வீரபத்ரபிள்ளை ஏன் விலக்கப்பட்டார் என தெரிகிறது. 1935ல் சோவியத் ருஷ்யாவால் கொல்லப்பட்ட புகாரின் என்ற கம்ய்டூனிஸ்டுத்தலைவரைப்பற்றி எழுதியதனால்தான் அவர் விலக்கப்பட்டார். அருணாச்சலத்தை நூல் எழுதவேண்டாம் என கட்சி எச்சரிக்கிறது. அவன் பிடிவாதமாக எழுதுகிறான்.
அருணாச்சலம் ஆழமான தார்மீகபிரச்சினைகளை அடைகிறான். ஒரு கருத்தியலை நம்பி கொலைகளை செய்யும் ஒருவன் பின்னர் அந்த கருத்தியலே பொய் என ஆனால் என்ன செய்வது? ஒரு கொள்கைக்காக பல லட்சம்பேர் செத்தபின் அக்கொள்கை முற்றிலும் பிழை என ஆனால் உயிர்களுக்கு யார் பதில் சொல்வது?
கொஞ்சம்சம்கொஞ்சமாக மனநிலை பிறழ்வு அடையும் அருணாச்சலம் அந்த மனப்பிறழ்வுநிலையில் புகாரினையும் ஏசுவையும் கண்டடைகிறான். அந்த தத்துவக் கேள்விக்கு ஏசுவே பதில் சொல்கிறார் அவன் மனச்சிக்கல் அழிகிறது
வரவேற்பு
தமிழில் எழுதப்பட்ட அரசியல்நூல்களிலேயே தலையாயது என விமர்சகர் ராஜமார்த்தாண்டன் இந்நூலை குறிப்பிட்டிருக்கிறார்