பின் மற்றும் இப்னு (அரபு மொழி)
அரபு மொழியில் பெயரிடல் மரபில், இபின் (ibn) மற்றும் பின் (Bin) இரண்டையும் "மகன்" என்ற பொருளில் மொழிபெயர்க்கலாம்.[1] ஒசாமா பின்லேடன் என்றால் "லாடனின் மகன் ஒசாமா" என்பதாகும். அரபியர்களின் பெயர்கள் மூன்று அல்லது நான்கு தலைமுறை முன்னோர்களின் குறிப்புகளை உள்ளடக்குவது வழக்கம். பெயர்ச் சொல் ஒவ்வொன்றும் பின் அல்லது இபினுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே சில பெயர்கள் பின் எனப்பயன்படுத்துகிறது, மற்றவை இப்னு என்றும் பயன்படுத்தப்படுகிறது. அரபு மொழியில் இபின் மற்றும் பின் என்ற சொற்கள் வாக்கியத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து பொருள் மாறுகிறது. இவைகள் ஆரம்பத்தில் இருந்தால், அது alef-ba-nun என எழுதப்படும், அதை இப்னு (ibn) என ஒலிபெயர்க்கப்படும். ஒரு பெயரின் நடுவில் இப்னு தோன்றினால், அலெஃப் என உச்சரிக்கப்படும். இந்த அமைப்பைக் கருத்தில் கொண்டு, மனிதனின் பெயரைச் சுருக்கெழுத்தில் குறிப்பிடும்போது "பின்லேடன்" பயன்படுத்துவது முற்றிலும் துல்லியமானது அல்ல.
சவுதி அரேபியா போன்ற பழங்குடி பண்பாட்டுடன் வலுவான தொடர்புகள் உள்ள இடங்களில் பின் மற்றும் இபின் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அபு' என்றால் "தந்தை" என்று பொருள். இது பெரும்பாலும் புனைப்பெயராக பயன்படுத்தப்படுகிறது. ஒரு மனிதனின் நண்பர்கள் அவரை அபு என்று குறிப்பிடலாம். அல்லது அவரது முதல் பிறந்த மகனின் பெயரைக் குறிப்பிடலாம். அல்லது ஒருவருது வலுவை குறிக்க பெயருக்கு முன் அபு இணைக்கலாம். மீசை வைத்திருக்கும் ஒரு பையனை அபு ஷனாப அல்லது "மீசையின் தந்தை" என்று அழைக்கலாம். அதேபோல், அபுதாபி என்ற இடப்பெயருக்கு "கெஜல்களின் தந்தை" என்று பொருள்படும், "நிறைய கெஜல்கள் கொண்ட இடம்" என்று பொருள் கொள்ளலாம். (இப்ன் என்ற சொல் இதே போன்ற சொற்றொடர்களில் பயன்படுத்தப்படலாம். ஒரு "இப்ன் ஹலால்" எனில் ஒரு நல்ல பையன், அதே நேரத்தில் "இப்ன் ஹராம்" எனில் கெட்ட பையன்.