பிபிசி பாரசீக மொழித் தொலைக்காட்சி
பிபிசி பாரசீக மொழித் தொலைக்காட்சி (பாரசீக மொழி: تلویزیون فارسی بیبیسی Televizion-e Fârsi-ye BBC) என்பது பிபிசியின் பாரசீக மொழி செய்தித் தொலைக்காட்சி ஆகும். 14 சனவரி 2009 முதல் இந்தத் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது.[1] செய்மதி வழியாக ஒளிபரப்பப்படும் இத்தொலைக்காட்சியானது இணையவழியாகவும் கிடைக்கிறது. ஈரான், ஆப்கானித்தான், தஜிகிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகளில் வாழும் பாரசீக மொழியைப் பேசும் சுமார் 120 மில்லியன் மக்களை சென்றடையும் நோக்கில் இந்தத் தொலைக்காட்சி செயல்படுகிறது.
ஈரான் அரசு இச்சேவையின் பணியாளர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தொல்லைக்கு ஆளாக்கி, அச்சுறுத்தும் செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன.[2][3]
வரலாறு
தொகுஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு காமன்வெல்த் அலுவலகம் ஆண்டுதோறும் 15 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்குகிறது.[4] ,[5] இத்தொலைக்காட்சி சார்பற்ற ஊடகமாக இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரான் நாட்டின் சில ஊடக அமைப்புகள் இந்தத் தொலைக்காட்சியை பிரித்தானிய அரசின் கொள்கைப் பரப்புக் கருவியாக குற்றஞ்சாட்டுகின்றன.[6] ஈரான் அரசு தான் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஐயத்திற்குரியதாகவும் சட்டத்திற்குப் புறம்பானதாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இசுலாமியக் குடியரசின் நலங்களுக்கு எதிராக இந்தத் தொலைக்காட்சி செயல்படுவதாகவும் ஈரான அரசு குற்றஞ்சாட்டுகிறது.[4]
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, பிபிசி பாரசீக மொழித் தொலைக்காட்சியானது 13 மில்லியன் ஈரானிய நேயர்களைக் கொண்டுள்ளது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BBC Awaits response to Persian TV". BBC. 2009-01-14 இம் மூலத்தில் இருந்து 20 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090220034018/http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/7827574.stm.
- ↑ "Iran's threats to BBC Persian staff must be confronted". The Guardian. https://www.theguardian.com/media/commentisfree/2019/mar/17/irans-threats-to-bbc-persian-staff-must-be-confronted.
- ↑ "Iran accused of intimidating BBC Persian staff". BBC. https://www.bbc.com/news/world-middle-east-16874177.
- ↑ 4.0 4.1 Marrin, Minette (2009-01-14). "Bridging the Persian gulf". The Times (London). http://www.timesonline.co.uk/tol/comment/leading_article/article5512228.ece.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Foreign and Commonwealth Office; The British Broadcasting Corporation (2006-07-01). "Broadcasting Agreement for the Provision of the BBC World Service" (PDF). BBC/FCO. Archived (PDF) from the original on 5 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.
- ↑ "Iranian website alleges British government influence in BBC Persian TV". ZIBB. 16 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Why has Iran imprisoned Nazanin Zaghari-Ratcliffe?". The Economist. 16 November 2017 இம் மூலத்தில் இருந்து 17 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171117080245/https://www.economist.com/news/britain/21731407-jailing-british-citizen-highlights-crackdown-journalists-home-and-abroad-why-has.