பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி
பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி (Feodosy Nikolaevich Krasovsky) (உருசியம்: Феодосий Николаевич Красовский) (26 செப்டம்பர் [யூ.நா. 14 செப்டம்பர்] 1878 – அக்தோபர் 1, 1948) ஓர் உருசிய வானியலாளரும் பின்னர் சோவியத் வானியலாளரும் புவியளவியலாளரும் ஆவார்.[1] இவர் உருசியாவில் உள்ள காலிச்சில் பிறந்தார். இவர் 1900 இல் மாஸ்கோவில் உள்ள மெழெவாய் (நில அளக்கை) நிறுவனத்தில் தன் இளவல் பட்டம் பெற்றார். அங்கே இவர் 1907 இல் இருந்து விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்;.[2]
ஆராய்ச்சி
தொகுஇவர் 1928 இறுதியில் நடுவண் நில, வான் அளக்கையியல், நிலப்படவியல் நிறுவனத்தை உருவாக்கினார்; இவர் அங்கே 1928 முதல் 1930 வரை இயக்குநராக பணிபுரிந்தார். மேலும் அறிவியல் இனை இயக்குநராக 1930 முதல் 1937 வரை இருந்தார். இவர் 1924 முதல் 1930 வரை சோவியத் ஒன்றியத்தில் வானியல், புவிப்புற அளவையியல், நிலப்படவியல் துறைப்பணிகளுக்குத் தலைமை தாங்கினார். இவர் சோவியத் ஒன்றியத்தின் தேசிய புவிப்புற அளவையியல் வலையமைப்பை உருவாக்கும் கோட்பாடு, கட்டுமான முறைகளை வடிவமைத்தார். இது தொடர்பான நிலக்கிடப்பியல், ஈர்ப்பளவையியல் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகண்டார்.[3] இவரும் மற்றொரு சோவியத் புவிப்புற அளவையியலாளராகிய அலெக்சாந்த்தர் அலெக்சாந்திரோவிச் இசதோவும் 1940இல் ஒரு நீள்வட்டகத்தின் பருமான்ங்கலை வரையறுத்தனர். இந்த நீள்வட்டகம் பின் கிரசோவ்சுகி நீள்வட்டகம் என அழைக்கப்பட்டது. இது சோவியத்திலும் பிற நாடுகளிலும் 1990 கள் வரை பயன்பாட்டில் இருந்தது.[4] இவர் 1939 இல் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழக உயராய்வு உறுப்பினர் ஆனார்.
இவர் மாஸ்கோவில் 1948 இல் இறந்தார்.
விருதுகள்
தொகு- இசுடாலின் பரிசு (1943, 1952 – இறந்தபின்)
- செம்பதாகை ஆணை
- இலெனின் ஆணை
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Gillispie Coulston, Charles, Dictionary of Scientific Biography, v.7, American Council of Learned Societies, Scribner, 1972
- Farbman, Michael, Europa, Europa publications limited, 1930
- Surveying and Mapping: quarterly publication of American Congress on Surveying and Mapping, v.23, American Congress on Surveying and Mapping, United States Superintendent of Documents, Superintendent of Documents, 1963
- Guelke, Leonard, Cartographica, York University (Toronto, Ont.), Department of Geography, Canadian Cartographic Association, University of Toronto Press, 1971