பியரே பூர்டோ
பியரே பூர்டோ (Pierre Felix Bourdieu 1, ஆக்சுடு 1930 -23, சனவரி 2002) பிரெஞ்சு நாட்டின் சமூகவியலாளர், மாந்தவியலாளர், மெய்யறிவாளர் மற்றும் அரசியல் அறிவாளர் ஆவார். [1]
இளமைக் காலம்
தொகுபூர்டோ தெற்கு பிரான்சில் டென்குவின் என்ற சிறிய ஊரில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு ஏழை விவசாயியாகவும் அஞ்சல் துறை பணியாளாகவும் இருந்தார். தந்தை தந்த ஊக்கத்தினால் பாரிசில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மார்க்சியச் சிந்தனையாளர் லூயிஸ் ஆல்துசர் என்பவரின் வழிகாட்டுதலில் தத்துவம் பயின்றார். [2]
செயல்பாடுகள்
தொகுபூர்டோ கல்வியாளரும் நூலாசிரியருமாவார். 25 புத்தகங்களுக்கும் 300 கட்டுரைகளுக்கும் மேல் எழுதியுள்ளார். புதிய தாராளமயமாக்கலுக்கும் உலகமயமாக்கலுக்கும் எதிராகவும், அநியாயத்துக்கு, அடக்குமுறைக்கு எதிராகவும் சுரண்டலுக்கு எதிராகவும் பேசினார்; எழுதினார்; இயங்கினார்.
கருத்துகள்
தொகுசமூகத்தில் அதிகாரம் பல்வேறு வகைகளிலும் மிகவும் நுட்பமாகவும் பரவியுள்ளதை ஆராய்ந்தார். சமூக ஒழுங்கு தலைமுறை தலைமுறையாக எப்படி பேணப்படுகிறது என்பதையும் எண்ணி எழுதினார். மேற்கத்திய மரபு சார்ந்த கருத்துக்களிலிருந்து இவர் மாறுபட்டார். மூலதனம் என்பது பொருளாதாரம் தொடர்பான கருத்தியல் சார்ந்தது. ஆனால் இவர் சமூகப் பண்பாட்டு மூலதனம் என்பதைப் புதியதாக அறிமுகப்படுத்தினார்.
பிலைசு பாஸ்கல் இன் தத்துவங்கள் இவரைக் கவர்ந்தன. இவருடைய சமூக வியல் கருத்துக்கள் கல்வி, பண்பாடு, மாந்தவியல் ஆகியவற்றைத் தழுவியதாகவும் அவற்றில் செல்வாக்கு செலுத்துவதாகவும் இருந்தன.
மேற்கோள்
தொகு- ↑ Bourdieu, P. "Outline of a Theory of Practice". Cambridge: Cambridge University Press.
- ↑ http://routledgesoc.com/category/profile-tags/habitus