பிரகாசு தாககே
பிரகாசு தாககே (Prakash Dahake) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பிரகாசு உத்தம்ராவ் தாககே என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தின் கரஞ்சா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2] 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் இராசேந்திர பட்னியை 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரகாசு தாககே தோற்கடித்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இராசேந்திர பட்னி 2004 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவரை மீண்டும் தோற்கடித்தார். அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தேசியவாத கட்சியில் போட்டியிட தொகுதியைக் கூட பிரகாசு தாககேவால் பெற முடியவில்லை. அதனால் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு இவர் தள்ளப்பட்டார். பிரகாசு தாககே போட்டியிட்ட 5 சட்டமன்றத் தேர்தல்களில் 4 தேர்தல்களில் தோல்வியடைந்து ஒருமுறை மட்டுமே அவரால் வெற்றிபெற முடிந்தது.
2021 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று பிரகாசு தாககே இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Pradip Kumar Maitra (23 October 2009). "No dent in Cong base". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 5 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605012243/http://www.hindustantimes.com/StoryPage/Print/468212.aspx.
- ↑ Joshi, Prakash (22 October 2009). "All eyes on rebels". Times of India. http://timesofindia.indiatimes.com/city/mumbai/All-eyes-on-rebels/articleshow/5146956.cms.