பிரகார்டு முக்கோணம்
வடிவவியலில், ஒரு முக்கோணத்தின் ஒரு உச்சி மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளியை இணைக்கும் கோடும், வேறொரு உச்சி மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளியை இணைக்கும் கோடும் வெட்டிக்கொள்ளும் புள்ளியை ஒரு உச்சியாகவும், மற்றும் இதேபோல எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணத்தின் உச்சிகளையும் பிரகார்டு புள்ளிகளையும் வேறுவிதமான இரு சேர்வுகளாக கொண்டு காணப்பட்ட இரு புள்ளிகளையும் இணைத்து வரையப்படும் முக்கோணமே பிரகார்டு முக்கோணம் (Brocard triangle) ஆகும். இம் முக்கோணம் முதலாவது பிரகார்டு முக்கோணம் எனவும் அழைக்கப்படுகிறது.[1] பிரகார்டு வட்டமானது பிரகார்டு முக்கோணத்தின் சுற்று வட்டமாக அமைகிறது.[2] பிரெஞ்சு கணிதவியலாளர் ஹென்றி பிரகார்டின் நினைவாக இம்முக்கோணம் பெயரிடப்பட்டுள்ளது.[3]
பட விளக்கம்
தொகுமுக்கோணம் ABC இன் இரு பிரகார்டு புள்ளிகள் B1, B2.
A மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளி B1 ஐ இணைக்கும் AB1 கோடும் (சிவப்பு), C மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளி B2 உடன் இணைக்கும் CB2 கோடும் (நீலம்) வெட்டிக்கொள்ளும் புள்ளி பிரகார்டு முக்கோணத்தின் ஒரு உச்சியாகவும்,
C மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளி B1 ஐ இணைக்கும் CB1 கோடும் (சிவப்பு), B மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளி B2 உடன் இணைக்கும் BB2 கோடும் (நீலம்) வெட்டிக்கொள்ளும் புள்ளி பிரகார்டு முக்கோணத்தின் இரண்டாவது உச்சியாகவும்,
B மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளி B1 ஐ இணைக்கும் BB1 கோடும் (சிவப்பு), A மற்றும் அதற்குரிய பிரகார்டு புள்ளி B2 உடன் இணைக்கும் BA2 கோடும் (நீலம்) வெட்டிக்கொள்ளும் புள்ளி பிரகார்டு முக்கோணத்தின் மூன்றாவது உச்சியாகவும் உள்ளதைக் காணலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gentry, F. C. (1941), "Analytic geometry of the triangle", National Mathematics Magazine, 16: 127–140, JSTOR 3028804, MR 0006038.
- ↑ Weisstein, Eric W., "First Brocard Triangle", MathWorld.
- ↑ "Brocard biography". Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2015-06-15.