பிரடெரிக் சார்லசு பிரேசர்

பிரடெரிக் சார்லசு பிரேசர் (Frederic Charles Fraser)(15 பிப்ரவரி 1880, வூல்விச்சில் – 2 மார்ச் 1963, லின்வுட்டி) என்பவர் தட்டாரப்பூச்சிகள் குறித்து நிபுணத்துவம் பெற்ற ஓர் இங்கிலாந்து நாட்டினைச் சார்ந்த பூச்சியியல் வல்லுநர் ஆவார். இவர் இள பேரையராக பதவியில் ஓர் அறுவை சிகிச்சை நிபுணராக இந்தியாவில் இராணுவ சேவையைத் தொடர்ந்தார். பிரேசர் தட்டாரப்பூச்சிகள் குறித்த ஆய்வுப் பணிகளுக்கு தன் வாழ்க்கையினை அர்ப்பணித்தார். இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இவரது சேகரிப்பு பராமரிக்கப்படுகிறது. ஏ. எரிக் கார்ட்னருடன் பிரேசரின் கடிதப் பரிமாற்றம் இந்த அருங்காட்சியகத்தின் நூலகத்தில் உள்ளது. ஐரிஷ் தட்டாரப்பூச்சியியலாளர் நியால் மெக்நீலுடன் பிரேசரின் கடிதப் பரிமாற்றம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளது. இவர் அரச பூச்சியியல் கழகத்தின் சக உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kimmins, D.E. (1966). A list of the Odonata types described by F. C. Fraser, now in the British Museum (Natural History). Bulletin of the British Museum (Natural History). 18(6): 173-227.
  2. Kimmins, D.E. (1968). A list of the type-specimens of Libellulidae and Corduliidae (Odonata) in the British Museum (Natural History). Bulletin of the British Museum (Natural History). 22(6):277-305
  3. Kimmins, D.E. (1969). A list of the type-specimens of Odonata in the British Museum (Natural History) Part II. Bulletin of the British Museum (Natural History). 23(7):287-314
  4. Kimmins, D.E. (1970). A list of the type-specimens of Odonata in the British Museum (Natural History) Part III. Bulletin of the British Museum (Natural History). 24(6):171-205

ஆதாரங்கள்

தொகு
  • அனான். [எஃப்சி ஃப்ரேசர்] என்டோம். திங்கள். மேக். , 99, 1963, பக். 96 ஒரு உருவப்படம் உட்பட.

வெளி இணைப்புகள்

தொகு
  • Works by or about Frederic Charles Fraser at Internet Archive