பிரணவ் வெங்கடேசு

பிரணவ் வெங்கடேசு (pranav venkatesh ) இந்தியாவின் 75 ஆவது சதுரங்க கிராண்டுமாசுட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 15 வயது நிறைவடைந்த பிரணவ் தமிழகத்தின் 27 ஆவது கிராண்டுமாசுட்டர் என்ற சிறப்புக்கு உரியவரானார்.

சென்னை வேலம்மாள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் பிரணவ், இளம் வயதிலிருந்தே பல்வேறு சதுரங்க போட்டித் தொடர்களில் பங்கேற்று பதக்கங்கள் பல வென்றிருக்கிறார். மேலும் மாநில அளவிலான சதுரங்க வெற்றியாளர் போட்டியில் மூன்று முறை வெற்றியாளர் பட்டமும், 2021-ம் ஆண்டில் நடைபெற்ற உலக அளவிலான அதிவேக சதுரங்க வகைப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சுற்றான செர்பியா திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று கிராண்டுமாசுட்டர் பட்டத்திற்கான முதலாவது தகுதியைப் பெற்றார். அங்கேரியின் புடாபெசுட்டு நகரில் சூன் மாதம் நடைபெற்ற போட்டியில் இப்பட்டத்திற்கான இரண்டாம் தகுதி நிலைக்கு பிரணவ் தேர்வானார். இறுதியாக உருமேனியாவில் நடந்த இறுதி ஆட்டத்தில் 9 சுற்றுகளில் 7 புள்ளிகள் பெற்று கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வென்றார்.[1][2][3]

பிரணவின் தந்தை எம். வெங்கடேசு ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரணவ்_வெங்கடேசு&oldid=3489751" இலிருந்து மீள்விக்கப்பட்டது