பிரதம மந்திரி வய வந்தனா ஓய்வுதியத் திட்டம்

பிரதம மந்திரி வயதானோர் ஓய்வுதியத் திட்டம் (இந்தி:பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக இந்திய அரசாங்கத்தால் 2017 மேமாதம் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும், இது முதலில் மே 4, 2017 முதல் மார்ச் 31, 2020 வரை இயக்கத்திலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு இந்தத் திட்டம் மார்ச், 2020க்குப் பிறகு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இப்போது 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..[1]

இந்த திட்டத்தை இந்திய அரசு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து செயற்படுத்துகின்றது.[2]

2021-22 நிதியாண்டில், இத்திட்டம் 7.40% ஆண்டு வட்டிவிகிதமாக உறுதியான ஓய்வூதியத்தை மாதம்/காலாண்டு/அரையாண்டு/ஆண்டுதோறும் ஓய்வுதியதாரர்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கும். 31 மார்ச் 2022 வரை வாங்கிய அனைத்து பாலிசிகளுக்கும் 10 வருட பாலிசி காலத்திற்கு இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய விகிதம் செலுத்தப்படும்.

பாலிசியில் சேர்வதற்கான தகுதிகள் தொகு

வரம்புகள் ஆண்டு
குறைந்தபட்ச நுழைவு வயது 60 ஆண்டுகள்
அதிகபட்ச நுழைவு வயது இல்லை
பாலிசி காலம் 10 ஆண்டுகள்
ஒருவருக்கு அதிகபட்ச கொள்முதல் (மாத வட்டியில்) ரூ 15 லட்சம்
ஒருவருக்கு குறைந்தபட்ச கொள்முதல் (மாத வட்டியில் ரூ 1, 62,162/-
ஒருவருக்கு அதிகபட்ச கொள்முதல் (மாத வட்டியில்) ரூ 14, 49, 086/-
ஒருவருக்கு குறைந்தபட்ச கொள்முதல் (மாத வட்டியில் ரூ 1, 56, 658/-

குறைந்தபட்ச ஓய்வூதியம்:

காலம் தொகை
மாதந்தோறும் ரூ.1,000/-
ஒரு காலாண்டிற்கு ரூ.3,000/-
ஒரு அரையாண்டுக்கு ரூ. 6,000/-
ஒரு ஆண்டுக்கு ரூ.12,000/-


அதிகபட்ச ஓய்வூதியம்:

காலம் தொகை
மாதந்தோறும் ரூ. 9,250/-
ஒரு காலாண்டிற்கு ரூ. 27,750/-
ஒரு அரையாண்டுக்கு ரூ. 55,500/-
ஒரு ஆண்டுக்கு ரூ.1,11,000/-


இந்த திட்டத்தின் அதிகபட்ச ஓய்வூதியத்தின் உச்சவரம்பு என்பது ஒரு முழு குடும்பத்திற்கும் அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து பாலிசிகளின் கீழும் ஓய்வூதியத்தின் மொத்த அளவு அதிகபட்ச ஓய்வூதிய வரம்பை மீறக்கூடாது. இந்த நோக்கத்திற்காக குடும்பம் ஓய்வூதியம் பெறுபவர், அவரது / அவள் மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களைக் கொண்டிருக்ககூடும்.

  • ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பாலிசிதாரர்கள் ஆயுள் சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனிச் சிறப்புரிமையைப் பெற்றுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மூலம் ஆஃப்லைனிலும், ஆன்லைனிலும் இந்தத் திட்டத்தை வாங்கலாம்.[3]

பயன்கள் தொகு

  • பாலிசி காலத்தின் போது, ​​ஓய்வூதியம் பெறுபவருக்கு சுய அல்லது வாழ்க்கைத் துணையின் ஏதேனும் ஆபத்தான சூழ்நிலையில்/ நோய்க்கான சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவது போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் முன்கூட்டியே வெளியேற அனுமதிக்கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் செலுத்த வேண்டிய சரண்டர் மதிப்பு கொள்முதல் விலையில் 98% ஆக இருக்கும்.
  • 10 வருட பாலிசி காலத்தின் இறுதி வரை ஓய்வூதியம் பெறுபவர் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், இறுதி ஓய்வூதியத் தவணையுடன் கொள்முதல் விலையும் திருப்பிச் செலுத்தப்படும்.
  • 10 வருட பாலிசி காலத்தில் ஓய்வூதியம் பெறுபவர் இறக்ககூடிய சூழ்நிலையில், கொள்முதல் விலை பாலிசிதாரரால் நியமிக்கப்பட்ட பயனாளிக்கு திருப்பி வழங்கப்படும்.
  • 3 பாலிசி ஆண்டுகளுக்குப் பிறகு கொள்முதல் விலையில் 75% வரை கடன் பெறுவதற்க்கு பாலிசிதாரர்களுக்கு அனுமதிக்கப்படும். ஓய்வூதிய தவணைகளில் இருந்து கடன் வட்டி வசூலிக்கப்படும் மற்றும் க்ளெய்ம் வருவாயில் இருந்து கடன் வசூலிக்கப்படும்.

சான்றுகள் தொகு

  1. "Schemes". புதுதில்லி, இந்தியா. 2022-02-05. https://financialservices.gov.in/new-initiatives/schemes. பார்த்த நாள்: 2022-02-05. 
  2. "Schemes". புதுதில்லி, இந்தியா. 2022-02-05. https://licindia.in/Products/Pension-Plans/Pradhan-Mantri-Vaya-Vandana-Yojana1. பார்த்த நாள்: 2022-02-05. 
  3. "PMVVY". புதுதில்லி, இந்தியா. 2022-02-05. https://licindia.in/getattachment/Products/Pension-Plans/Pradhan-Mantri-Vaya-Vandana-Yojana1/Final-Policy-Document_PMVVY-15-06-2020.pdf.aspx. பார்த்த நாள்: 2022-02-05.