பிரதிவ சுந்தரி தேவி

பிரித்தானிய இந்தியாவின் இளவரசி

பிரதிவ சுந்தரி தேவி நாராயண் (Prativa Sundari Devi Narayan) இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சுதேச சமத்தானமாக விளங்கிய கூச் பெகர் சமத்தானத்தின் இந்திய இளவரசி ஆவார்.[1] மாண்டர் இளவரசி என்ற பெயராலும் இவர் அழைக்கப்பட்டார். 1891 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி கல்கத்தாவில் உள்ள லில்லி இல்லத்தில் கூச் பெகரின் மகாராசா சர் நிருபேந்திர நாராயண் பூப் பகதூரின் இரண்டாவது மகளாக பிறந்தார். மன்னராட்சிப் பகுதியின் மகாராணியான சுனிதி தேவி இவரது தாயார் ஆவார்.[2][3] 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாளன்று கல்கத்தாவிலுள்ள உட்லண்ட்சில் நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளருமான மைல்சு மாண்டரை இவர் திருமணம் செய்து கொண்டார். 1922 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியன்று இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.[4] 23 ஜூலை 1923 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் தேதியன்று கல்கத்தாவில் இளவரசி இறந்தார் [5]

பிரதிவ சுந்தரி தேவி நாராயண்Prativa Sundari Devi Narayan
மகாராசகுமாரி
பிறப்பு1891
இறப்பு1923
அரசமரபுகூச் பெகர் சமத்தாணம்
தந்தைநிருபேந்திர நாராயண்
தாய்சுனிதி தேவி

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. name=Poddar2015>Maharanis: women of royal India.
  2. Nicholas Mander. Varnished Leaves: a biography of the Mander family of Wolverhampton. Owlpen Press, 2004.
  3. Mosley, Charles, editor, Burke's Peerage, Baronetage & Knightage, 107th edition, 3 volumes (Burke's Peerage (Genealogical Books) Ltd, 2003), volume 2, page 2589, sub Mander baronetcy of the Mount [U.K.], cr. 1911.
  4. The Times, case reported June 8 1921
  5. Nicholas Mander, Borromean Rings: genealogy of the Mander Family, Owlpen Press, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிவ_சுந்தரி_தேவி&oldid=4161750" இலிருந்து மீள்விக்கப்பட்டது