பிரத்தியட்சம்

பிரத்தியட்சம் என்பது தமிழில் காட்சியளவை அல்லது புலக்காட்சி என வழங்கப்படுகின்றது. பிரத்தி+அக்ச அல்லது பிரத்தி+அக்சி எனப் பகுத்து புலனுறுப்புக்கு முன்னதாக அல்லது கண் முதலான புலன்களுக்கு முன்னதாக [1] எனப் பொருள்சுட்டும் வகையில் அமைகின்றது.

பொதுவாக கண் முதலான ஐம்புலன்களாலும் பெறப்படும் அறிவு புலக்காட்சி எனப்படும். எனினும் இந்திய தத்துவங்களிடையே காட்சி பற்றிய வரைவிலக்கணப்படுத்தலில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

சிவஞானசித்தியார் காட்சி பற்றிய வரைவிலக்கணப்படுத்தலில் "மாசறு காட்சியை யந்திரிவின்றி விகற்பமுன்ன ஆசற வறிவதாகும்" [2] என்று, நேரே அறிவதுடன் ஐயம், திரிபு, விகற்பம் ஆகியன இல்லாது அறிகின்ற அறிவே காட்சி எனக்கூறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உசாவலுக்குதவியவை

தொகு
  1. பேராசிரியர். ஞானகுமாரன்.நா., சைவசித்தாந்தத் தெளிவு, தூண்டி பதிப்பகம்- யாழ்ப்பாணம். பக் 111
  2. சிவஞானசித்தியார் சுபக்கம் பாடல் 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரத்தியட்சம்&oldid=3913742" இலிருந்து மீள்விக்கப்பட்டது