பிரபந்த தீபிகை
பிரபந்த தீபிகை என்ற தமிழ் நூலின் ஆசிரியர் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர். 14 சீர் விருத்தப் பாடல்கள் 100 கொண்டது இந்த நூல்.
சதகம் பாடியவர்கள் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். நிகண்டு, தீபம், தீபிகை, விளக்கம், என்னும் பெயரில் தோன்றியுள்ள நூல்கள் ஒரே வகையின.
பிரபந்த வகைகளும் பொருத்த வகைகளும் விளக்க வகை நூல்களில் சொல்லப்படும் பொதுச் செய்திகள். அத்துடன் இந்த நூலில் புதுமையான செய்திகள் பல சொல்லப்படுகின்றன. அவற்றுள் சில:
- ஆழ்வார்கள் பிறப்பு, சைவ அடியார்,
- யுக மன்னர், நாயக்கர், நவாப்புகள்
- தாள, ராக எண்ணங்கள்
- வேதம், ஸ்மிருதி, உபநிடதம், சிவாகமம், தீட்சை
கருவிநூல்
தொகு- பிரபந்த தீபிகை, முனைவர்கள் ச.வே.சுப்பிரமணியன், அன்னி தாமசு ஆகியோர் தொகுப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியீடு, 1982.