பிரபா மிசுரா

பிரபா மிசுரா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

Prabha Misra

இளமை தொகு

பிரபா மிசுரா திரிபாதி குடும்பத்தில் ஷாஹபாத் ஹர்தோயில் பிறந்தார். அஜ்மீரில் ரயில்வே கணக்காளராக பணிபுரியும் பண்டித அசாரி லால் மிசுராவின் மகன் சுக் தியோ பிரசாத் மிசுராவினை பெரும்பாலான பெண்களைப் போலவே தனது 13 வயதிலேயே மணந்தார்.

கல்வி தொகு

பிரபா ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலைப் பட்டங்களையும் அஜ்மீர் அரசு கல்லூரியில் இளநிலை சட்டப் பட்டத்தினையும் பெற்றார்.

திருமண வாழ்க்கை தொகு

மிசுரா ஒரு பிரகாசமான மாணவி மற்றும் அறிவைப் பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் கல்வியைத் தொடர இவருடைய மாமனார் உறுதுணையாக இருந்தார். மிசுரா கல்வி பயின்ற காலத்தில் கல்வியைத் தொடர்ந்த ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர்.

அரசியல் வாழ்க்கை தொகு

மிசுரா இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்கர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் 1957 முதல் 1977 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1957,[1] 1962,[2] 1967[3] மற்றும் 1972[4] தேர்தல்களில் இவர் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். மிசுரா இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினை சார்ந்தவர். மிசுரா தனது வாழ்நாளில் பல்வேறு அமைச்சரவை பதவிகளை வகித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Rajasthan Assembly Election Results in 1957". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017.
  2. "Rajasthan Assembly Election Results in 1962". www.elections.in.
  3. "Rajasthan Assembly Election Results in 1967". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017.
  4. "Rajasthan Assembly Election Results in 1972". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபா_மிசுரா&oldid=3680518" இலிருந்து மீள்விக்கப்பட்டது