பிரபுல் பிட்வாய்

பிரபுல் பிட்வாய் (Praful Bidwai, 1949-23 சூன் 2015) இந்திய இதழாளர், முன்னணிச் செய்தித்தாள்களின் பத்தி எழுத்தாளர், அரசியல் விமர்சகர், செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். மும்பை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் (ஐ. ஐ. டி.) படித்தார். அங்குப் படிக்கும் போதே இடதுசாரிச் சிந்தனைகளுடன் அவர் செயற்பட்டார்.

பிரபுல் பிட்வாய்

இதழிகைப் பணிதொகு

டைம்சு ஆப் இந்தியா என்னும் நாளிதழில் முதுநிலைத் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் பல நாளிதழ்களில் பத்திக் கட்டுரைகள் எழுதி வந்தார். பிரண்ட் லைன், இந்துத்தான் டைம்சு, டைம்சு ஆப் இந்தியா, தி கார்டியன், லி மென்டே டிப்லோமாடிக், தி டெய்லி தார் ஆகிய செய்தித்தாள்களில் பல்வேறு சிக்கல்கள் பற்றித் தம் அழுத்தமான கருத்துகளை எழுதினார். அரசியல் சிக்கல்கள், சுற்றுச் சூழல், மனித உரிமைகள், வெளியுறவுக் கொள்கைகள் ஆகியன பற்றி எழுதினார்.

சமூகப் பணிகள்தொகு

  • புதுதில்லியில் உள்ள 'சமூக முன்னேற்றத்துக்கான மையம்' என்னும் அமைப்பில் பணியாற்றினார்.
  • நேரு நினைவு அருங்காட்சியகத்தில் மூத்த உறுப்பினராக இருந்தார்.
  • சமூக அறிவியல் ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில், கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம், நேசனல் புக் டிரட்டு ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.
  • ஆதிவாசி மக்களுக்காகப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
  • புனே நகரத்தில் தொழிலாளர் சனநாயக சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார்.
  • நவீன தாராளமயமாக்கம், இந்துத்துவா, அணு உலை, அணு ஆயுதங்கள், அணுவாற்றல் ஆகியவற்றை எதிர்த்துச் செயல்பட்டார்.
  • சங்பரிவாரின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார்.
  • குசராத்தில் இசுலாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகளைக் கண்டித்தார்.
  • நடுவணரசின் பெரிய திட்டங்களான தூய்மை இந்தியா, சிமார்ட் நகரங்கள், கங்கையாற்றைத் தூய்மைப் படுத்தல் ஆகியவற்றை விமர்சனம் செய்தார்.

நூல்கள்தொகு

பிரபுல் பிட்வாய் நூல்கள் சில எழுதியுள்ளார். '1999:நியூ நியூட்சு: இந்தியா பாக்கித்தான் அண்டு குளோபல் நியுக்கிளியர் டிசு ஆர்மமென்ட்' என்பது அவற்றுள் ஒன்றாகும்.

அமைதிப் பரிசுதொகு

அணு ஆயுதப் பரவலைத் தடுத்து நிறுத்த பிரபுல் பிட்வாய் ஆற்றிய பணியைப் பாராட்டி அவருக்கும் அச்சின் வானைக் என்பவருக்கும் சியன் மக்பிரைட் பன்னாட்டு அமைதிப் பரிசு (Sean McBride International Peace Prize) 2000ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

உசாத்துணைதொகு

http://timesofindia.indiatimes.com/india/Former-TOI-journalist-Praful-Bidwai-passes-away/articleshow/47801567.cms

http://www.prafulbidwai.org/index.php

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபுல்_பிட்வாய்&oldid=2715939" இருந்து மீள்விக்கப்பட்டது