பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம் என்பது இந்து சமய நம்பிக்கையின் படி பிரம்மனால் நடத்தப்படுகின்ற உற்சவம் ஆகும்.[1] கோயில் திருவிழாக்களில் நடத்தப்படுகின்ற உற்சவங்களில் இந்த பிரம்மோற்சவம் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

தொன்மம்

தொகு

பிருகு முனிவர் தன்னுடைய வருகையை மதியாமல் படுத்திருந்த திருமாலின் மாரின் மீது எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் மார்பில் குடியிருந்த திருமகள், திருமாலை விட்டுப் பிரிந்தார். திருமால் வைகுந்தத்திலிருந்து பூலோகத்திற்கு வந்து வேங்கட மலையில் தங்கினார். அங்குவந்த பிரம்மன் பெரியதாக விழா எடுத்தார். [2]

திருமலையில் பிரம்மோட்சவம் புகழ்பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் இவ்விழா நடத்தப்படுகிறது. இறுதி நாள் திருவோணத் திருநாளாக வருமாரு அமைக்கப்படுகிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. பிரம்மோற்சவம் என்றால் என்ன? தினமலர் கோயில்கள்
  2. ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் அக்டோபர் 5, 2013

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மோற்சவம்&oldid=2089333" இலிருந்து மீள்விக்கப்பட்டது