பிரம்ம தாண்டவம்
(பிரம தாண்டவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரம்ம தாண்டவம் அல்லது பிரம தாண்டவம் என்பது சிவபெருமானின் எண்ணற்ற சிவதாண்டவங்களில் ஒன்றாகும். இந்த தாண்டவம் பஞ்ச தாண்டவங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. [1]
திருமுருகன் பூண்டியிலும், திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயிலில் பிரம தாண்டவ தரிசனத்தினைக் காணலாம். [2]
தாண்டவக் காரணம்
தொகுசிவபெருமானிடம் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டினர். அதனால் சிவபெருமானும் அம்முனிவர்களுக்காக ஆனந்த நடனம் ஆடினார். இதனை அறிந்த துர்வாச முனிவர், தனக்கும் சிவபெருமான் நடன தரிசனம் தரவேண்டும் என எண்ணினார். அதற்காக திருக்களர் வந்த துர்வாசர், அங்கிருந்த வனத்தினை பாரிஜாத வனமாக மாற்றி, இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனத்தினை துர்வாருக்கு தந்தருளினார்.
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://www.thinakaran.lk/2012/09/24/?fn=r1209243[தொடர்பிழந்த இணைப்பு] 9435) பஞ்ச தாண்டவங்களும் எவை? ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம்
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=341 அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்