பிராங்கி கூர்வாய்த் தவளை
பிராங்கி கூர்வாய்த் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மிசுடிசெல்லசு
|
இனம்: | மி. பிராங்கி
|
இருசொற் பெயரீடு | |
மிசுடிசெல்லசு பிராங்கி கார்க் & பிஜூ, 2019[1] |
பிராங்கி கூர்வாய்த் தவளை (Franky's narrow-mouthed frog-மிசுடிசெல்லசு பிராங்கி; Mysticellus franki) என்பது மைக்ரோகைலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். மர்மமான கூர்வாய்த் தவளைகளான மிசுடிசெல்லசு என்ற பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினம் இதுவாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. இங்கு இது வடக்கு கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவின் மைக்ரிலெட்டா தவளைகள் இதன் நெருங்கிய உறவினர்கள் என்று வகைப்பாட்டியல் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சொற்பிறப்பியல்
தொகுமிசுடிசெல்லசு என்ற பேரினத்தின் பெயர், இலத்தீன் "மர்மமான" மற்றும் சிறிய எனப் பொருள்படும் மிசிடிகசு + எல்லசு என்பதிலிருந்து பெறப்பட்ட ஓர் ஆண்பால் பெயர்ச்சொல் ஆகும். இது மனிதக் குடியேற்றங்களைச் சுற்றியுள்ள பாதையோரப் பகுதிகளில் இருந்தபோதிலும் இதனைக் காண இயலாது மறைந்து வாழும் திறனுடையது.[2]
பிராங்கி என்ற இதன் சிற்றினப் பெயர், உலகளாவிய நீர்நில வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் கல்வியில் பங்காற்றிய, குறிப்பாக இந்திய நீர்நில வாழ்வன ஆய்வு பங்களிப்பிற்காக, விரிஜே பல்கலைக்கழக பிரசசெலின் பரிணாம உயிரியலாளர் பேராசிரியர் பிராங்கி போசுயூயிட்டை கவுரவிக்கும் ஓர் இலத்தீன் சொல்லாகும்.
நடத்தை
தொகுஇந்த தவளைகள் சாலையோரங்களில் கைவிடப்பட்ட மணல் சுரங்கங்கள் உட்படத் தற்காலிக நீர்க் குழிகளில் ஒன்றுகூடும் போது, பருவமழை முதல் இரண்டு நாட்களில் மட்டுமே காணலாம். கலவிக்குப் பின்னர் முட்டையிட்டு விட்டு மறைந்து விடும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Garg, Sonali; Biju, S.D. (2019). "New microhylid frog genus from Peninsular India with Southeast Asian affinity suggests multiple Cenozoic biotic exchanges between India and Eurasia" (in en). Scientific Reports 9 (1): 1906. doi:10.1038/s41598-018-38133-x. பப்மெட்:30760773. Bibcode: 2019NatSR...9.1906G.
- ↑ "New 'mystery' frog discovered in India" (in en-GB). 2019-02-13. https://www.bbc.com/news/world-asia-india-47208169.