பிராங்கு மெக்கிளீன்
பிராங்கு மெக்கிளீன் (Frank McClean) (13 நவம்பர் 1837 – 8 நவம்பர் 1904) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் கதிர்நிரல் அளவியின் பொருள்வில்லைப் படிகம் வடிவமைத்த முன்னோடியும் ஆவார்.[1]
வாழ்க்கை
தொகுஇவரது தந்தையான ஜான் பிரான்சிசு மெக்கிளீன் ஒரு பொறியாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். பிராங்கு மெக்கிளீன் 1859 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றதும் அங்கே இவர் அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பட்டமேற்படிப்பு அறிஞராக இருந்துள்ளார். அப்போதே, 1859 முதல் 1862 வரை இவர் சர் ஜான் ஆவுக்சா குழுமத்தில் பொறியியல் பயிற்சியாளராகவும் விளங்கினார். அப்போது இவர் பென்சு மாவட்டங்களுக்கான வடிகால் அமைப்புகளின் மேம்பாட்டில் பங்கேற்றுள்ளார். இவர் 1862 இல் மெக்கிளீன், சுட்டைல்மன் குழுமத்தில் பங்குதாரராக இருந்து 1870 இல் வானியலில் ஈடுபட அதிலிருந்து பணிவிடை பெற்றுள்ளார். இவர் தன் மனைவி கிரெகு எனும் எல்லனுடனும் தம் மக்களுடனும் (மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்) பெர்ன்கிளிப்பில் உள்ள தர்ன்பிரிட்ஜ் வெல்சில் வாழ்ந்தார். [2]
இவர் வானியலில் கதிர்நிரல் அளவி வடிவமைப்புப் பணியில் முதன்மையான பங்களிப்பு செய்துள்ளார். இவர் தனது பயனுக்கான விண்மீன் கதிர்நிரல் அளவியை 1875 இல் புனைந்துள்ளார். இதைக் கொண்டு சூரிய prominences நோக்கிடு செய்துள்ளார். இவர்1877 இல் தர்ன்பிரிட்ஜில் உள்ள இரசுட்டுகால் வீட்டிற்குச் சென்று அங்கே வீட்டின் கூரையில் தன் வரிக்கீற்று கதிர்நிரல் அளவியுடனும் மின்பயன்கருவியுடனும் இணைந்த புவிமுனை சூரிய நோக்களவியை நிறுவி, சூரிய கதிர்நிரலையும் உயரெடைத் தனிமங்களின் கதிர்நிரலையும் ஆய்வுசெய்யத் தொடங்கியுள்ளார். இவர் ஒரு வான்காணகத்தை நிறுவி, வடத் தொகுத்து அரைக்கோளத்தின் மிகப் பொலிவான விண்மீன்களின் அளக்கையை மேற்கொண்டார். இவர் இரண்டு ஆண்டுகளில் வட அரைக்கோள அளக்கையை முடித்து, இயற்கை இதழில் 166 விண்மீன்களுக்க்கான கதிர்நிரல்களை வெளியிட்டார். இவர் 1897 இளவேனிற் காலத்தில் தென் அரைக்கோள விண்மீன்களை அளக்கை செய்ய, நன்னம்பிக்கைமுனைக்க்குச் சென்றார். ஆறு மாதங்களில் இவர் 116 பொலிவு மிக்க விண்மீன்களின் கதிர்நிரல் ஒளிப்படங்களை எடுத்து முடித்தார். பிறகு, 1897 இல் பீட்டா சுகார்ப்பி, பீட்டா கானிசு மெஜாரிசு, பீட்டா சென்ட்டாரி, பீட்டா குரூசிசு ஆகியவற்றின் கதிர்நிரல்களில் உயிரகத்தின் தடத்தைக் கண்டுபிடித்தார்.[3] இவருக்கு 1899 இல் விண்மீன்களின் கதிர்நிரல் அளக்கைப் பணிக்காக அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் வழங்கப்பட்டது.[4] பிறகு, இவர் இலண்டனில் உள்ள 2, ஆன்சுலோ சதுக்கத்திலும் 1, ஆன்சுலோ தோட்டத்திலும் வாழ்துள்ளார். இவர் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டார்; தொல்நாணயங்களைத் திரட்டினார்;இத்தாலியிலும் பிரான்சிலும் குறிப்பிடத்தக்க இடைக்காலக் கலைப்படைப்புகள், நூல்கள், கையெழுத்துப்படிகள் ஆகியவற்றைத் திரட்டினார்.[5] இவரது மகன் பிரான்சிசு மெக்கிளீன் முன்னோடி வான்வலவராக மிகவும் பெயர்பெற்றார்.
இவர் பெல்ஜியத்தில் உள்ள பிரசலில் இறந்தார். இவரது உடல் இலண்டனில் உள்ள கென்சால் கிரீன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "McClean, Frank (MLN855F)". A Cambridge Alumni Database. University of Cambridge.
- ↑ 1905MNRAS..65..338. Page 338. Bibcode: 1905MNRAS..65..338.. http://articles.adsabs.harvard.edu//full/1905MNRAS..65..338./0000338.000.html. பார்த்த நாள்: 2017-01-30.
- ↑ David Gill (astronomer) (1899). "On the Presence of Oxygen in the Atmosphere of Certain Fixed Stars". Astrophysical Journal 10: 272–282. doi:10.1086/140647. Bibcode: 1899ApJ....10..272G. https://archive.org/details/sim_astrophysical-journal_1899-11_10_4/page/272.
- ↑ "Obituary: Frank McClean, LL.D., F.R.S". The Observatory 27 (351): 448–449. 1904. Bibcode: 1904Obs....27..448..
- ↑ Sayle, Michael E. (2010). [https://books.google.com/books?
isbn=110800783X Fitzwilliam Museum McClean Bequest]. Cambridge U. Press.
{{cite book}}
: Check|url=
value (help); Missing pipe in:|url=
(help); line feed character in|url=
at position 32 (help)