பிராண பிரதிஷ்டை மந்திரம்
பிராண பிரதிஷ்டை மந்திரம் என்பது தாந்திரிக வழிபாடு, யந்திர வழிபாடு[1] ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்படும் மந்திரமாகும். இந்த மந்திரத்தினை இந்து சமயத்தில் யந்திரங்கள், சிலைகள், விக்ரகங்கள் என பலவற்றையும் பிரதிஷ்டை செய்ய பயன்படுத்துகின்றனர்.
இந்த மந்திரம் இந்து சமயத்தில் கடவுள் சிலைகளையும், விக்ரகங்களையும் சக்தி பெறச் செய்ய கூறப்படும் மந்திரமாகும். [2] .[2] இந்த பிராண பிரதிஷ்டை மந்திரத்தினை உபதேசித்தப் பிறகு, அதற்குறிய கடவுள்களை ஆவாஹனம் செய்கின்றனர்.
கல்லினை தேர்ந்தெடுத்து சிற்பி வடிக்கும் சிலைக்கு பிராண பிரதிஷ்டை மந்திரத்தை உச்சரித்து கடவுளாக வழிபடத் தொடங்குகின்றனர்.