பிராத்செர் வளையக்கூட்டு வினை
பிராத்செர் வளையக்கூட்டு வினை (Bradsher cycloaddition reaction) என்பது டையீல்சு-ஆல்டர் வினையின் ஒரு வகையாகும். இவ்வினை பிராத்செர் வளையமாதல் வினை என்றும் அழைக்கப்படுகிறது. அக்ரிடிசினியம் போன்ற அரோமாட்டிக் நேர்மின்னயனி அசாடையீன்கள் அல்லது ஐசோகுயினோலியம் அயனிகள் பொதுவான டையீல்சு ஆல்டர் வினையில் [4+2] கூட்டுவினையில் ஈடுபடுகின்றன.
பிராத்செர் வளையக்கூட்டு வினை முதன்முதலில் சி.கே. பிராத்செர் மற்றும் டி.டபிள்யூ.கி. சாலமோன்சு ஆகியோரால் 1958 இல் அடையாளப்படுத்தப்பட்டது [1][2][3].
மேற்கோள்கள்
தொகு- ↑ C. K. Bradsher, T. W. G. Solomons (1958). "Acridizinium Ion Chemistry. II.1The Diels-Alder Reaction". J. Am. Chem. Soc. 80 (4): 933. doi:10.1021/ja01537a045.
- ↑ Merck Index, 14th Ed.
- ↑ C. K. Bradsher, J. A. Stone (1968). "Nature of the addition of dienophiles to the acridizinium ion". Journal of Organic Chemistry 33 (2): 519. doi:10.1021/jo01266a009.
.