பிரானெரைட்டு

யுரேனைல் கார்பனேட்டு வகைக் கனிமம்

பிரானெரைட்டு (Braunerite) என்பது K2Ca(UO2)(CO3)3•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். நீரேற்று யுரேனைல் கார்பனேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. செக் குடியரசின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மண்டலமான மேற்கு போகிமியாவின் யாச்சிமோவ் ஓர் மாவட்டத்திலுள்ள சுவார்னோசுட்டு சுரங்கப் பணியாளர்களுடன் சேர்ந்து செக் குடியரசின் அறிவியல் கல்வி அகாதமியின் ஒரு பிரிவான இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த யாக்கூப் பிளாசில் முதன்முதலில் இக்கனிமத்தைக் கண்டறிந்தார்[1].

பிரானெரைட்டு
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுK2Ca(UO2)(CO3)3•6H2O
இனங்காணல்
நிறம்மஞ்சள்
படிக அமைப்புஒற்றைசரிவச்சு வகை
மேற்கோள்கள்[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிரானெரைட்டு கனிமத்தை Bun[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பிரானெரைட்டு படிகங்கள் மஞ்சள் நிறத்தில் கண்ணாடி போல பளபளப்பாகக் காணப்படுகின்றன. வேதியியல் முறைப்படி லைன்கைட்டு கனிமத்தை இக்கனிமம் ஒத்துள்ளது. செக் குடியரசின் தலைநகரான பிராகாவில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கனிமவியல் மற்றும் பாறையியல் துறையில் இக்கனிமத்தின் படிவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. லாசு ஏஞ்சல்சு மாகானத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திலும் இக்கனிமப் படிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன[3].

அமைவிடம்

தொகு

செக் குடியரசில் உள்ள மேற்கு போகிமியாவின் யாச்சிமோவ் ஓர் மாவட்டத்திலுள்ள சுவார்னோசுட்டு சுரங்கம் இக்கனிமத்தின் இருப்பிடமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Braunerite: Braunerite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-08-25.
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 
  3. "New Mineral Listing | Carbon Mineral Challenge". mineralchallenge.net (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-09-05. பார்க்கப்பட்ட நாள் 2017-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரானெரைட்டு&oldid=4093502" இலிருந்து மீள்விக்கப்பட்டது