பிரான்செஸ் லிவைன்

பிரான்செஸ் லிவைன் (Frances Lewine, சனவரி 20, 1921சனவரி 19, 2008) ஒரு அமெரிக்க ஊடகவியலாளர் மற்றும் வெள்ளை மாளிகை செய்தியாளர்.[1]

பிரான்செசு லிவைன்
Frances Lewine
பிறப்பு சனவரி 20, 1921(1921-01-20)
நியூயோர்க் நகரம்
இறப்பு சனவரி 19, 2008(2008-01-19) (அகவை 87)
கல்வி ஹண்டர் கல்லூரி
தொழில் ஊடகவியலாளர்
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) அசோசியேட்டட் பிரசு, சிஎனென்

வாழ்க்கை வரலாறுதொகு

நியூயோர்க் நகரத்தில் பிரான்சிஸ் லிவைன் பிறந்தார். ஹன்டர் கல்லூரியில் இவர் கல்வி கற்றதுடன் அங்கே அவர் கல்லூரி பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். அசோசியேட்டட் பிரசில்[2] இணையும் முன்பு இவர் கூரியர்-நியூசில் பணிபுரிந்தார்.

1956 இல் இவர் அசோசியேட்டட் பிரஸ் வெள்ளை மாளிகை செய்தியாளராக இணைந்தார். அங்கு 1977 வரை பணிபுரிந்தார். இக்காலப்பகுதியில் சுமார் ஆறு அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களின் நிர்வாகம் பற்றி செய்திகளைத் தொகுத்தார். அசோசியேட்டட் பிரசில் இருந்து விலகியதும் இவர் ஜிம்மி காட்டரின் நிர்வாகத்தில் போக்குவரத்து திணைக்களத்தின் பொது அலுவலராகப் பணிபுரிந்தார். 1981 இல், இவர் சின்என்என் நிறுவனத்தில் பணிபுரிந்தார்[2].

பெண்களுக்கான தேசிய ஊடகக் கழகத்தின் தலைவராக லிவைன் இருந்தார். அத்துடன் பெண் ஊடகவியலாளரின் சம உரிமைக்காகப் போராடினார். வெள்ளை மாளிகை செயற்படுத்திய அவரது செயற்றிட்டங்களில் தனக்கு திருப்தி இல்லை என்று லிவைன் அறிவித்தார்[2].

ஜனவரி 2008 இல் வலிப்பு காரணமாக இவர் உயிரிழந்தார்.[1]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்செஸ்_லிவைன்&oldid=3221235" இருந்து மீள்விக்கப்பட்டது