பிராமணப்பள்ளி பாலையா
பிராமணப்பள்ளி பாலையா (Brahmanapalli Balaiah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1930 ஆம் ஆண்டு கமரெட்டியில் உள்ள பிராமணப்பள்ளியில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் கமரெட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்திற்கு 1978 ஆம் ஆண்டில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று பிராமணப்பள்ளி பாலையா மாரடைப்பால் காலமானார்.[3]
பிராமணப்பள்ளி பாலையா Brahmanapalli Balaiah | |
---|---|
கமரெட்டி சட்டமன்ற உறுப்பினர். | |
பதவியில் 1978–1983 | |
முன்னையவர் | ஒய். சத்யநாராயணா |
பின்னவர் | பார்சி கங்கையா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1930 |
இறப்பு | 21 பிப்ரவரி 2019 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னதாக ஒரு நகராட்சி உறுப்பினராகவும், நகராட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றிய இவரது கட்சிக்கான அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இவருக்கு கமரெட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பாலையா கமாரெட்டியில் இருந்து ஐதராபாத்திற்கு பேருந்தில் வந்து செல்வது வழக்கம். மேலும், மேற்கு ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் அரசு வழங்கிய 600 சதுர அடி நிலத்தை வாங்க தன்னிடம் ரூ.20,000 இல்லை எனக் கூறி இவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1978". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
- ↑ "Kamareddy Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
- ↑ "Congress ex MLA Balaiah dies of heart attack". The Hans India. 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.