பிரிக்கும் கோடு (வார்ப்புத் தொழில்)

ஒரு வார்ப்பானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களைக் கொண்டு செய்யப்படும். அப்பாகங்கள் சந்திக்கும் இடமே பிரிக்கும் கோடு (parting line) அல்லது அச்சுப்பிரிப்பு வரை என அழைக்கப்படும்[1]. உருக்கி ஊற்றப்பட்ட உலோகம் (அல்லது நெகிழி), பிரிக்கும் கோட்டினூடே ஊடுருவி வார்ப்பிற்கு வெளியே சிறிய அளவில் வரலாம். மெல்லியதாக உருவாகும் இந்தப் பொருளிழை, 'மோல்டிங் பிளாஷ்' அல்லது 'பிளாஷிங்' என்றழைக்கப்படும். வார்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்களைச் சுற்றி இந்தப் பொருளிழையினை நாம் காண இயலும்.

மேற்கோள்கள்தொகு

  1. "Parting Lines". 2015-04-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-31 அன்று பார்க்கப்பட்டது.