பிரித்தானிய அருங்காட்சியக நூலகத்தில் உள்ள தமிழ் நூற்களின் நூற்பட்டியல் (ஆங்கில நூல்)

பிரித்தானிய அருங்காட்சிய நூலகத்தில் உள்ள தமிழ் நூற்களின் நூற்பட்டியல் (A catalogue of the Tamil books in the library of the British Museum) என்பது 1909 ஆம் ஆண்டு பிரித்தானிய அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூற்பட்டியல் ஆகும். இந்த நூலை ஜி. யு. போப் அவர்கள் முதலில் தொகுத்தார். அவர் இறந்த பின், அவரது பணியை எல். டி. ஃபார்நெற் (L. D. Barnet) தொடர்ந்து இந்த நூலை வெளியிட்டார். இதில் தமிழின் அரிய பல்துறை நூல்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நூலில் தமிழ் நூலின் தலைப்புகள் பெரும்பாலும் தமிழிலும், சில இடங்களில் அர்வி (அரபுத்தமிழ்) எழுத்துமுறையிலும் தரப்பட்டுள்ளன.

இந்த நூல் இணைய ஆவணகத்தால் ஆவணப்படுத்தப்பட்டு, இலவசமாகப் படிக்க, தரவிறக்க கிடைக்கிறது. இதன் பதிப்புரிமை காலவதியாகிவிட்டதால், பொதுவில் உள்ள ஓரு படைப்பு ஆகும்.

வெளி இணைப்புகள்தொகு