பிரித்தானிய நூலகத் தமிழ்ச் சேகரிப்புகள்

பிரித்தானிய நூலக தமிழ் சேகரிப்புகள் (British Library’s Tamil collections) என்பது சுவடிகள், நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பல்லூடகங்கள் என பல் வகையான சேகரிப்புக்களைக் கொண்ட ஒரு பெரும் சேகரிப்பு ஆகும். குறிப்பாக 19, 20 ஆம் நூற்றாண்டுகளைக் சேர்ந்த வெளியீடுகள் இங்கு உள்ளன.[1]

சுவடிகள் தொகு

பிரித்தானியா நூலகம் ஏறக் குறைய 204 சுவடிகளைக் கொண்டுள்ளது. பிற பிரித்தானியா நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற சுவடிகளும் தற்போது இந்த நூலகத்தில் உள்ளன. பல கையெழுத்துப் பிரதிகளையும் பிரித்தானியா நூலகம் கொண்டுள்ளது.

நூல்கள் தொகு

சுமார் 50,000 வரையாக தமிழ் நூல்கள் இதழ்களை பிரித்தானியா நூலகம் கொண்டுள்ளது. இதில் மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய 19 ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டு நூல்களும் அடங்கும். 1714 பழமையா நூல்களில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையிலான நூல்கள் இங்குண்டு. குறிப்பாக Tranquebar Mission Press நூல்கள் பல இங்குண்டு.[1]

நூற்பட்டியல்கள் தொகு

பல்வேறு வகையான பழம் தமிழ் நூற்பட்டியல்களை பிரித்தானிய நூலகக தமிழ் சேகரிப்புகள் கொண்டுள்ளன. இவற்றுள் பின்வருவன அடங்கும்:

  • India Office Library and Records Catalogue of Tamil Books pre-1950
  • India Office Library and Records Catalogue of Tamil Books 1950-1972
  • India Office Library and Records / Oriental Collections Tamil catalogue 1972-1983, edited by Nalini Persad
  • Catalogue of the Tamil books in the library of the British Museum - Barnett, L.D. 1909
  • Supplementary Catalogue of Tamil Books in the British Museum - Barnett, L.D. 1931
  • A Second supplementary catalogue of the Tamil books in the Library of the British Museum. Edited by A. Gaur, A. 1980

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Tamil language collections

வெளி இணைப்புகள் தொகு