பிரின் செயல்முறை

பிரின் செயல்முறை ( Brin process ) என்பது தொழில் முறையில் ஆக்சிசன் தயாரிக்கப் பயன்படும் ஒரு செயல்முறையாகும். இம்முறையில் ஆக்சிசன் தயாரிப்பது தற்பொழுது வழக்கொழிந்து விட்டது. இச்செயல்முறையில் 500 முதல் 600 பாகை செல்சியசு வெப்பநிலையில் பேரியம் ஆக்சைடு காற்றுடன் வினைபுரிந்து முதலில் பேரியம் பெராக்சைடைக் கொடுக்கிறது. பின்னர் 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சிதைந்து ஆக்சிசனை வெளிவிடுகிறது.

2 BaO + O2 ⇌ 2 BaO2

இச்செயல்முறை 1811 ஆம் ஆண்டில் சோசப் லூயிசு கேலூசக் மற்றும் லூயி சாக் தெனார் என்பவர்களால் கண்டறியப்பட்டது. பின்னர் 1852 ஆம் ஆண்டில் சீன் – பாப்டிசுடு போசிங்கால்டு இச்செயல்முறையை விரிவுபடுத்தி ஆக்சிசன் தயாரிக்க முற்பட்டார். ஆனால் இச்செயல்முறை சில சுற்றுகளுக்குப் பின்னர் தோல்வியடைந்தது. கியுவெண்டின் மற்றும் ஆர்தர் லியோன் பிரின் என்ற இவருடைய இரு மாணவர்கள் பேரியம் கார்பனேட்டில் கார்பன் டை ஆக்சைடு சுவடுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த கார்பன் டை ஆக்சைடை நீக்க சோடியம் ஐதராக்சைடு சேர்த்து சிக்கலைத் தீர்த்தனர். 1884 ஆம் ஆண்டில் அவர்கள் ஒரு தொழிற்சாலையை நிறுவி மேம்படுத்தப்பட்ட இம்முறையில் ஆக்சிசன் தயாரித்தனர். சுண்ணாம்பொளி க்காக பயன்படுத்துவது மட்டுமே ஆக்சிசனின் அப்போதைய முக்கியப் பயன்பாடாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டு முடிவதற்கு முன் நீரை மின்னாற்பகுத்தல் மற்றும் திரவமாக்கப் பட்ட காற்றை பகுதி காய்ச்சி வடித்தல் போன்ற ஆக்சிசன் உற்பத்தி முறைகள் எளிமையானதால் இச்செயல்முறை சிறிது சிறிதாக வழக்கொழிந்தது[1][2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Hepworth, T. C. (1892). "Oxygen for Limelight". Nature 47 (1208): 176. doi:10.1038/047176b0. Bibcode: 1892Natur..47..176H. https://archive.org/details/sim_nature-uk_1892-12-22_47_1208/page/n6. 
  2. Jensen, William B. (2009). "The Origin of the Brin Process for the Manufacture of Oxygen". Journal of Chemical Education 86 (11): 1266. doi:10.1021/ed086p1266. Bibcode: 2009JChEd..86.1266J. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2009-11_86_11/page/1266. 
  3. Ihde, Aaron John (1984-04-01). The development of modern chemistry. p. 681. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-64235-2.
  4. Almqvist, Ebbe (2003). History of industrial gases. pp. 66–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-47277-0.
  5. McCosh, Frederick William James (1984). Boussingault, chemist and agriculturist. pp. 121–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-277-1682-8.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரின்_செயல்முறை&oldid=4175501" இலிருந்து மீள்விக்கப்பட்டது