பிரிமென்றகடு
முலையூட்டிகளில், நெஞ்சறையையும் (thoracic cavity) வயிற்றறையையும் (abdominal cavity) பிரிக்கும் ஒரு வன்கூட்டுத்தசையே பிரிமென்றகடு (Thoracic diaphragm or Diaphragm) ஆகும்[1]. இது உதரவிதானம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது விலா எலும்புகளால் அமைக்கப்பட்ட விலா எலும்புக்கூட்டின் (Rib cage) கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. மூச்சுவிடல் செயன்முறையில் இதற்கு ஓர் முக்கிய பங்கு உண்டு.
பிரிமென்றகடு | |
---|---|
![]() | |
சுவாசத் தொகுதி | |
இலத்தீன் | diaphragma |
ம.பா.தலைப்பு | Diaphragm |
Dorlands/Elsevier | d_15/12293509 |
செயற்பாடு தொகு
மூச்சுவிடல் என்னும் உடற்றொழிலியல் செயல்முறையில் இந்தப் பிரிமென்றகடு முக்கிய பங்காற்றுகின்றது. விலா எலும்புத் தசைகளுடன் இணைந்து தொழிற்படும் இந்தப் பிரிமென்றகட்டுத் தசையில் ஏற்படும் சுருக்கமும், தொடர்ந்து ஏற்படும் தளர்ச்சியும் தொடர்ச்சியாக மாற்றி மாற்றி நிகழ்வதனால் நெஞ்சுக் கூட்டின் கனவளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதனால் உள்மூச்சு, வெளிமூச்சு நிகழ்வுகள் நிகழ்கின்றன.
மேற்கோள்கள் தொகு
- ↑ Campbell, Neil A. (2009). Biology: Australian Version (8th ). Sydney: Pearson/Benjamin Cummings. பக். 334. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4425-0221-5. https://archive.org/details/biology0000unse_h9g5.