பிரிஸ்கில்லா மற்றும் அக்கில்லா

பிரிஸ்கில்லா /pr[invalid input: 'ɨ']ˈsɪlə/ மற்றும் அக்கில்லா /ˈækw[invalid input: 'ɨ']lə/ என்பவர்கள் புதிய ஏற்பாட்டில் குறிக்கப்படும் முதலாம் நூற்றாண்டில் மறைபணியாற்றிய தம்பதியராவர். இவர்கள் மரபுப்படி எழுபது சீடர்களில் பட்டியலிடப்படுகின்றனர். விவிலியத்தில் திருத்தூதர் பவுல் இவர்களை, கிறிஸ்து இயேசுவுக்காக தம்மோடு சேர்ந்து உழைக்கின்றவர்கள் என்று கூறுகின்றார்.Rom. 16:3 NASB[1] இவர்கள் ஆதி கிறுத்தவர்களுக்கு ஊக்கமூட்டி கிறித்தவ நெறியில் முனைப்புடன் இருக்க தூண்டினர். பவுல் இவர்களை தமது கடிதங்களில் மிகவும் புகழ்ந்துள்ளார்.Rom. 16:3-4 பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அப்பொல்லோவுக்கு கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கியதாக விவிலியம் குறிக்கின்றது.Acts 18:26 எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் பிரிஸ்கில்லா என சிலர் நம்புகின்றனர்.[2] புதிய ஏற்பாட்டின் நான்கு புத்தகங்களில் இவர்கள் ஆறு முறை குறிக்கப்படுகின்றனர். இவர்கள் தனித்தனியே எங்கும் குறிக்கப்படவில்லை எனினும் மூன்று முறை பிரிஸ்கில்லாவின் பெயர் முதலில் குறிக்கப்படுகின்றது. இது அக்காலத்தின் ஆணாதிக்க வழக்கிற்கு மாறானது என்பது அறிஞர் கூற்று.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Keller, Marie Noël. Priscilla and Aquila: Paul's Coworkers in Christ Jesus. Liturgical Press, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8146-5284-8.
  2. Hoppin, Ruth. Priscilla's Letter: Finding the Author of the Epistle to the Hebrews. Lost Coast Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-882897-50-1
  3. Achtenmeier, P.J. (1996). HarperCollins Bible Dictionary (revised ed.). HarperCollins. p. 882. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-060037-3.