பிரீடவுன்

பிரீடவுன் (ஆங்கில மொழி: Freetown), சியெரா லியொன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள இந்நகரம், அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது சியெரா லியொனின் பொருளாதார, நிதி, கலாச்சார, கல்வி மையம் ஆகும். நகரின் பொருளாதாரம் அதன் துறைமுகத்தைச் சார்ந்து காணப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டு மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்டொகை 772,873[1] ஆகும். நகரின் தற்போதைய மக்கட்டொகை 1,070,200 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சியெரா லியொன் நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ 17% ஆகும். பெரும்பான்மையாக சியெரா லியொன் கிரியோல் மக்களைக் கொண்டிருந்தாலும், இது நாட்டின் அனைத்து இனக் குழுக்களும் கணிசமான அளவில் வாழும் நகரமாக விளங்குகின்றது.

பிரீடவுன்
மத்திய ஃபிரீ டவுனின் தோற்றமும் புகழ்பெற்ற பருத்தி மரமும்.
மத்திய ஃபிரீ டவுனின் தோற்றமும் புகழ்பெற்ற பருத்தி மரமும்.
நாடு சியேரா லியோனி
பிரதேசம்மேற்குப் பிரதேசம்
மாவட்டம்மேற்குப் பிரதேச நகர மாவட்டம்
தோற்றம்மார்ச் 11, 1792
அரசு
 • வகைநகர சபை
 • மெயர்Herbert George-Williams (APC)
பரப்பளவு
 • மொத்தம்138 sq mi (357 km2)
ஏற்றம்84 ft (26 m)
மக்கள்தொகை (2004)
 • மொத்தம்7,72,873
நேர வலயம்Greenwich Mean Time
Freetown seen from Spot satellite

மேற்கோள்கள்தொகு

  1. "Statistics Sierra Leone, 2004 Population and Housing Census" (PDF). 2012-10-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-06-04 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீடவுன்&oldid=3563637" இருந்து மீள்விக்கப்பட்டது