பிரீத்தி சீனிவாசன்

பிரீத்தி சீனிவாசன் (Preethi Srinivasan பிறப்பு 1979) [1] 19 வயதுக்குட்பட்ட தமிழகப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் [2] தலைவி ஆவார்.1997 ஆம் ஆண்டில் தனது 17ஆவது வயதில் தேசிய வாகையாளர் தொடரின் போதும் மாநில அணியின் தலைவியாக இருந்தார். ஒரு விபத்தில் இருந்து மீண்ட பின்னர், [3] இவர் சோல்ஃப்ரீ என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவினார், இது ஆபத்தான முதுகெலும்புக் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பது, மறுவாழ்வு அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டது.மேலும், இந்திய இளைஞர்களிடையே விபத்தில் இருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புகிறது. [4]

கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை தொகு

பிரீத்தி 1997 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பென்சில்வேனியா , அப்பர் மெரியன் ஏரியா உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.  தனது தந்தையின் வேலை காரணமாக, பிரீத்தி வெவ்வேறு கலாச்சாரங்கள் / மரபுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. 

விபத்துக்குப் பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் இசை, கலை, திரைப்படங்கள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.

அங்கீகாரம் தொகு

  • விஜய் டிவியின் "சிகரம் தொட்ட பெண்கள் - ரே ஆஃப் ஹோப் விருது [5]
  • ரெயின்ட்ராப்ஸின் "2014 ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர்" விருது
  • ஃபெமினா "பெண் சக்தி" விருது 2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க முதல் 10 பெண்களுக்கு வழங்கப்பட்டது
  • திறன் விருது 2014.
  • சமூகப் பணிகளில் சிறந்து விளங்கியதற்காக சுதேசி பத்திரிகையின் "துருவ விருது"
  • மாற்றத்தின் முகவர் "2014-15 ஆம் ஆண்டிற்கான மாவட்ட ரோட்டராக்ட் கவுன்சிலின் விருது
  • தமிழக முதல்வரின் கல்பனா சாவ்லா விருது [6]

சான்றுகள் தொகு

  1. "Soulfree of Preethi Srinivasan -". web.archive.org. Archived from the original on 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  2. "She captained an under-19 women's cricket team and after her disability is inspiring thousands! - The Better India". thebetterindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  3. "Former cricket star is voice of disabled". https://timesofindia.indiatimes.com/city/chennai/Former-cricket-star-is-voice-of-disabled/articleshow/22385609.cms. 
  4. "Soulfree | Positively abled - About". soulfree.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  5. "Gitamritam - Profile | Preethi Srinivasan". gitamritam.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  6. "Preethi Srinivasan gets Kalpana Chawla award from Tamil Nadu CM". http://www.deccanchronicle.com/nation/current-affairs/160817/preethi-srinivasan-gets-kalpana-chawla-award-from-tamil-nadu-cm.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_சீனிவாசன்&oldid=3125194" இலிருந்து மீள்விக்கப்பட்டது