பிரீத்தி சௌத்ரி

ப்ரீத்தி இசட் சவுத்ரி (Preeti Z Choudhry) இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் மற்றும் தொகுப்பாளரும் ஆவார். இந்தியா டுடே தொலைக்காட்சியின் விவாதமான 'டு தி பாயிண்ட்' மற்றும் 'மோட்டார் சைக்கிள் டைரிஸ்' போன்ற பிற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக உள்ளார். 2014 ஆம் ஆண்டில் பஞ்சாபின் போதைப்பொருள் பிரச்சினை குறித்த தனது புலனாய்வு அறிக்கைக்காக ராம்நாத் கோயங்கா இதழிலியலி சிறந்து விளங்கியவர்களுக்கான விருதை வென்றார் . [1] [2] 2012 ஆம் ஆண்டில் சிறந்த செய்தி ஆவணப்படத்திற்கான இந்திய தொலைக்காட்சி அகாதமி விருதை வென்றார். [3] [4] இவர் இரண்டு செய்தி ஒளிபரப்பு விருதுகளை வென்றுள்ளார், 2014 இல் ஒன்று சிறந்த நடப்பு விவகாரத் திட்டத்துக்காகவும், 2012 ஆம் ஆண்டில் 'ஆண்டின் இளம் தொழில்முறை' விருதுக்காகவும். [5] 2019 ஆம் ஆண்டில் இவர் செய்தி ஒளிபரப்பு விருதுகளில் ஆங்கில பிரிவில் சிறந்த தொகுப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். [6]

குறிப்புகள்

தொகு
  1. "Rng Past Awards - 2014". Ramnath Goenka Foundation. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
  2. "India Today's Preeti Choudhry bags Ramnath Goenka award". MSN. 23 November 2015. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
  3. "Preeti Z Choudhry". India Today. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
  4. "Preeti Choudhry". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
  5. "enba2014". E4M Events. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
  6. "Shortlist for ENBA Awards 2019". E4M Events. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_சௌத்ரி&oldid=2944637" இலிருந்து மீள்விக்கப்பட்டது