பிரீமியர் பத்மினி
பிரீமியர் பத்மினி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு மகிழுந்து. 1964 ஆம் ஆண்டிலிருந்து 2000 வரை இது வெளியானது. வால்சந்த் குழுமத்தைச் சேர்ந்த பிரீமியர் ஆட்டோமொபைல்சு லிமிட்டடு நிறுவனம் ஃபியட் நிறுவனத்தினிடம் அனுமதி பெற்று முதலில் ஃபியட் 1100 டிலைட் என்ற பெயரிலும் 1973 முதல் பிரீமியர் பத்மினி என்ற பெயரிலும் இதை விற்பனை செய்தது.
உற்பத்தியாளர் | பிரீமியர் ஆட்டோமொபைல்சு |
---|---|
வேறு பெயர் | பத்மினி பிரீமியர் |
உற்பத்தி | 1964-2000 |
உடல் வடிவம் | 4 கதவுகள் |
இயந்திரம் | ஃபியட் 103 - 1,089 சிசி |
செலுத்தும் சாதனம் | 4 speed manual, rear wheel drive |
Related | Fiat 1100D |
புதிய பொருளாதாரக் கொள்கையால் விளைந்த தாராளமயமாக்கலுக்குப் பின்னர் பிறநாட்டு நிறுவனங்களான சுசுக்கி, ஃபோர்டு, ஹோண்டா, ஹீண்டாய், ஜெனரல் மோட்டார்சு போன்றவற்றின் வருகையால் பிரீமியர் பத்மினி சந்தையிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
பரவலர் ஊடகங்களில்
தொகுபண்ணையாரும் பத்மினியும் என்ற தமிழ்த்திரைப்படத்தில் பத்மினி மகிழுந்தை மையமாக வைத்துக் கதை பின்னப்பட்டுள்ளது.