பிரெஞ்சு மொழிக்கான கியுபெக் வாரியம்
கியூபெக் பிரெஞ்சு மொழிக்கான வாரியம் (Office québécois de la langue française) என்பது கியூபெக்கில் பிரெஞ்சு மொழியின் நலத்தையும் வளர்ச்சியையும், ஆங்கிலமயமாக்கத்தை எதிர்ப்பதையும் இலக்காகக் கொண்ட ஒர் அரச நிறுவனம் ஆகும். கியூபெக்கில் பிரெஞ்சு மொழி அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தாக உணரப்பட்ட 1960 களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரெஞ்சு மொழி உரிமைச் சட்டம் இந்த அமைப்பின் நோக்குகளையும் அதிகாரங்களையும் விரிவாக்கியது. பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதற்காக கடுமையான சட்டங்களை இது அமுல்படுத்தி வருகிறது.
அமுல்படுத்தும் சட்டங்கள்
தொகு- வணிகங்கள் பிரெஞ்சில் தமது வணிகத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கட்டாயம்.
- வணிகங்கள் பயன்படுத்தும் கணினிகள், மென்பொருட்கள் அனைத்தும் பிரெஞ்சில் அமைய வேண்டும்.
- அரச மொழியாக பிரெஞ்சை அமுல்படுத்தல்.
- கல்வி மொழியாக பிரெஞ்சை அமுல்படுத்தல்.
- சட்ட மொழியாக பிரெஞ்சை அமுல்படுத்தல்.
- கியூபெக்கு குடிவருபவர்களின் பிரெஞ்சு மொழியறிவு பெற வேண்டும்.
- வணிக விளம்பரப் பலகைகளில் பிரெஞ்சு மொழியின் முதன்மைத்துவம்.
- உணவகங்களில் உள்ள உணவுப் பட்டியல்கள் பிரெஞ்சில் இருக்க வேண்டும்.